Vivo V40e போன் இந்தியாவில் அறிமுகம் டாப் அம்சங்கள் பாருங்க

Updated on 25-Sep-2024
HIGHLIGHTS

Vivo V40e ஸ்மார்ட்போன் இன்று இந்தியாவில் அறிமுகம் செய்தது

இந்த புதிய போன்  Vivo V40 சீரிஸில்  ஒரு பகுதியாகும்

Vivo  V40e யின் விலை 8GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜ் யின் அடிப்படை மாடலுக்கு ரூ.33,999 ஆக வைக்கப்பட்டுள்ளது

Vivo V40e ஸ்மார்ட்போன் இன்று இந்தியாவில் அறிமுகம் செய்தது  இந்த புதிய போன்  Vivo V40 சீரிஸில்  ஒரு பகுதியாகும், ஆனால் இது மற்ற மாடல்களை விட மிகவும் குறைந்த  விலையில் உள்ளது. Vivo V40e உடன் நீங்கள் மெலிதான பிரீமியம் டிசைன் , 120Hz AMOLED டிஸ்ப்ளே மற்றும் 256GB வரையிலான இன்டெர்னல் ஸ்டோரேஜ்  பெறலாம்  மேலும் இதன் விலை  மற்றும் டாப் அம்சங்கள் பாருங்க

Vivo V40e யின் இந்திய விலை மற்றும் விற்பனை

Vivo  V40e யின் விலை 8GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜ் யின் அடிப்படை மாடலுக்கு ரூ.33,999 ஆக வைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி சேமிப்பகத்தின் மற்றொரு மாறுபாட்டில் வருகிறது, இது ரூ.35,999க்கு வழங்கப்படுகிறது.

இந்த போனின் முதல் விற்பனை அக்டோபர் 2 ஆரம்பமாகும்  பிளிப்கார்ட், விவோ ஆன்லைன் மற்றும் ரீடைளர் விற்பனை கடைகள், ரிலையன்ஸ் டிஜிட்டல், க்ரோமா மற்றும் பலவற்றின் மூலம் இதன் முன்பதிவு இன்று முதல் தொடங்கியுள்ளது.

Vivo V40e கலர் ஆப்சனை  பற்றி பேசினால், இது ராயல்  ப்ரான்ஸ் மற்றும் மின்ட் க்ரீன்  கலரில்  கிடைக்கும்.

Vivo V40e with 5500mah battery 50mp sony camera launched in India price specs top 5 alternatives

Vivo V40e யின் டாப்  அம்சம்.

டிஸ்ப்ளே : Vivo V40e ஆனது 6.77-இன்ச் FHD+ 3D வளைந்த AMOLED டிஸ்ப்ளேவுடன் வருகிறது, இது 120Hz ரெப்ராஸ் ரேட்டை வழங்குகிறது.

ப்ரோசெசர்: இந்த போனில் ப்ரோசெசர் பற்றி பேசினால், MediaTek Dimensity 7300 சிப்செட் LPDDR4x RAM மற்றும் UFS 2.2 சேமிப்பகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

கேமரா: Vivo V40e உடன், நீங்கள் 50MP Sony IMX882 முதன்மை சென்சார் மற்றும் 8MP அல்ட்ரா-வைட் கேமராவைப் பெறுவீர்கள். செல்ஃபிக்களுக்கு, இது 50MP அல்ட்ரா-வைட் முன் கேமராவைக் கொண்டுள்ளது.

பேட்டரி: ஸ்மார்ட்போனை இயக்க, 80W வேகமான சார்ஜிங்கை ஆதரிக்கும் 5500mAh பேட்டரி இதில் கொடுக்கப்பட்டிருக்கும்

மற்ற அம்சங்கள் :. Vivo போனில்  IP64 டஸ்ட் மற்றும் வாட்டார் ரெசிச்டன்ட் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் போட்டோக்களுக்கான  ஆரா லைட் ஆகியவை அறிவிப்பு பிளிங்கராகவும் செயல்படுகிறது.

இதையும் படிங்க: Samsung அதிரடி ஆபர் பண்டிகை கால சலுகை சிறப்பு 60% டிஸ்வுண்டில் வாங்கலாம்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :