Vivo அதன் V-சீரிஸ் வரிசையில் கடந்த வாரம் இந்தியாவில் Vivo V40e அறிமுகம் செய்தது.இந்த போனின் விலை ரூ.28,999 யில் தொடங்குகிறது, மேலும் இது MediaTek சிப்செட், இரட்டை 50MP கேமரா, 5500mAh பேட்டரி, நேர்த்தியான AMOLED டிஸ்ப்ளே ஆகியவற்றுடன் வருகிறது. அதன் முன்கூட்டிய ஆர்டர்கள் அறிமுகப்படுத்தப்பட்ட நாளிலிருந்து நடந்து வருகின்றன, இன்று, அதன் முதல் விற்பனை அக்டோபர் 2 முதல் இந்தியாவில் தொடங்கியது.
Vivo V40e இந்த புதிய போனின் விலை 8GB + 128GB ஸ்டோரேஜ் மாடலின் விலை 28,999ரூபாய் மற்றும் 8GB + 256GB மாடல் விலை 30,999ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது, இது Flipkart, Vivo India ஆன்லைன் ஸ்டோர் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் வாங்குவதற்கு கிடைக்கிறது.
அறிமுக சலுகையாக நிறுவனம் SBI மற்றும் HDFC பேங்க் கார்ட் பயனர்களுக்கு நிறுவனம் 10% பிளாட் இன்ஸ்டன்ட் தள்ளுபடி அல்லது 10% எக்ஸ்சேஞ்ச் போனஸ் வழங்குகிறது. இதை தவிர 6 மாதங்களுக்கு நோ கோஸ்ட் EMI ஆப்சன் வழங்கப்படுகிறது.
இந்த மொபைலை ஆஃப்லைனில் வாங்கினால், V-Upgradeல் 10% இன்ஸ்டன்ட் கேஷ்பேக் அல்லது 10% வரை அப்டேட் போனஸ் கிடைக்கும்.
இதை தவிர இதில் 10 மாதங்கள் வரையிலான இலவச வாரண்டி கிடைக்கும், இதை தவிர இதில் Vivo TWS 3e யில் 1,499ரூபாய் வரை டிஸ்கவுன்ட் விலையில் வாங்கலாம்.
Vivo V40e இந்த ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. Vivo வி30e யின் வாரிசாக விவோ வந்துள்ளது. இப்போது, இரண்டுமே ஏறக்குறைய ஒரே விலையில் வந்துள்ளன, ஆனால் V30e ஆனது V40e ஐ விட மிகவும் குறைந்த விலையில் இருக்கும், அமேசானில் தற்போது நடைபெற்று வரும் கிரேட் ஃபெஸ்டிவல் விற்பனையில் மிக சிறந்த தள்ளுபடி கிடைக்கும்.
V30e ஆனது ரூ.24,750 ஆரம்ப விலையில் மட்டுமே கிடைக்கிறது. இது மட்டுமின்றி, SBI பேங்க் கார்ட்கள் மூலம் வாங்கினால் ரூ.1250 வரை கூடுதல் தள்ளுபடியும் பெறலாம். மறுபுறம், அதன் 256ஜிபி மாறுபாடு தற்போது ரூ.28,750க்கு வாங்கலாம் மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்
இதையும் படிங்க:ecno Spark 30C 5G போன் அக்டோபர் இந்த தேதியில் அறிமுகமாகும் அனைத்து அம்பலமாகியது