Vivo இந்தியாவில் அறிமுகம் செய்தது, டாப் 5 அம்சங்கள்

Updated on 03-May-2024
HIGHLIGHTS

Vivo தனது புதிய V சீரிஸ் ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது

Vivo V Series இல் Vivo V30e ஐ கொண்டு வந்துள்ளது. இந்த போன் இந்தியாவின் மிக மெல்லிய போன் என்று கூறப்படுகிறது.

இந்த போனில் Sony IMX882 OIS 50MP சென்சார் கிடைக்கிறது.

Vivo தனது புதிய V சீரிஸ் ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. Vivo V Series யில் Vivo V30e ஐ கொண்டு வந்துள்ளது. இந்த போன் இந்தியாவின் மிக மெல்லிய போன் என்று கூறப்படுகிறது. போனில் 5500mAh பேட்டரி உள்ளது, இது தவிர, இந்த போனில் Sony IMX882 OIS 50MP சென்சார் கிடைக்கிறது.

இந்த போனின் சிறப்பம்சங்கள் தவிர, Vivo V30e ஸ்மார்ட்போனின் 4 அம்சங்கள் என்ன என்பதையும், இந்த போனின் 2 குறைபாடுகள் என்ன என்பதையும் இன்று நாங்கள் உங்களுக்குச் சொல்லப் போகிறோம். Vivo V30e ஸ்மார்ட்போன் ஈன்ன விலையில் கிடைக்குகிறது

Vivo V30e ஸ்மார்ட்போன் விலை தகவல் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

Vivo V30e ஸ்மார்ட்போனின் விலை பற்றி பேசுகையில், இந்த போனை ரூ.27,999 ஆரம்ப விலையில் வாங்கலாம். இந்த விலையில் நீங்கள் போனின் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி சேமிப்பு மாடலைப் பெறப் போகிறீர்கள். இது தவிர, 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி சேமிப்பு மாடலை ரூ.29,999க்கு வாங்கலாம். பிளிப்கார்ட் தவிர, இந்த போன் மே 9, 2024 அன்று விவோ இந்தியா இ-ஸ்டோரிலும் விற்கப்பட உள்ளது. இது தவிர மற்ற பார்ட்னர் ரீடெய்ல் ஸ்டோர்களிலும் இதை வாங்கலாம்.

இந்த போன் இரண்டு வெவ்வேறு கலர் விருப்பங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, நீங்கள் அதை வெல்வெட் ரெட் மற்றும் சில்க் ப்ளூ கலர்களில் வாங்க முடியும். இந்த போனின் டிசைன் சிறப்பாக உள்ளது

Vivo V30e டாப் 5 அம்சங்கள்

Vivo V30e டிஸ்ப்ளே

Vivo V30e ஸ்மார்ட்போனில் 6.78-இன்ச் FHD AMOLED டிஸ்ப்ளே உள்ளது, இது தவிர இது 120Hz ரெப்ரஸ் ரேட் இயங்குகிறது.

Vivo V30e ப்ரோசெச்சர்

இது தவிர, இந்த போனில் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 6 ஜெனரல் 1 ப்ரோசெசர் உள்ளது. இந்த ப்ரோசெசர் 4nm வேகத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி Adreno 710 GPU ஆனது போனில் வழங்கப்பட்டுள்ளது.

Vivo V30e ரேம் மற்றும் ஸ்டோரேஜ்

போனில் 8 ஜிபி ரேம் உடன் 256 ஜிபி வரை ஸ்டோரேஜ் உள்ளது. இந்த ஸ்டோரேஜ் அதிகரிக்க விரும்பினால், மைக்ரோ SD கார்டைப் பயன்படுத்தி இதைச் செய்யலாம்.

Vivo V30e ஒப்பரேட்டிங் சிஸ்டம்

Vivo V30e ஸ்மார்ட்போன் FuntouchOS அடிப்படையிலான Android 14 யில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 3 ஆண்டுகளுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட்களும், 4 ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட்களும் கிடைக்கும் என்று இந்த போனை பற்றி Vivo தெளிவாக கூறுகிறது. இதை ஒரு நல்ல விஷயம் என்று சொல்லலாம், அதாவது இந்த போனை வாங்கிய பிறகு நீண்ட நேரம் பயன்படுத்தலாம்.

Vivo V30e கேமரா

கேமராவைப் பற்றி பேசுகையில், Vivo V30e ஸ்மார்ட்போனில் இரட்டை கேமரா செட்டிங் உள்ளது, இதில் 50MP SonyIMX882 OIS கேமரா சென்சார் உள்ளது. இது தவிர, 8MP அல்ட்ரா-வைட் கேமராவும் போனில் கிடைக்கிறது. போனின் முன்பக்கத்தில் 50MP முன்பக்க கேமராவும் உள்ளது. இதன் மூலம் நீங்கள் தெளிவாக மிருதுவான மற்றும் விரிவான போட்டோ எடுக்கலாம்.

Vivo V30e பேட்டரி

Vivo V30e ஸ்மார்ட்போன் பெரிய 5500mAh பேட்டரியுடன் வருகிறது. இது தவிர, பேட்டரிக்கு 44W ஃபாஸ்ட் சார்ஜிங் வழங்கப்பட்டுள்ளது, இதன் மூலம் போனை மிக பாஸ்ட் சார்ஜ் செய்ய முடியும். இது தவிர, IP64 ரேட்டிங் வைக்கப்பட்டுள்ளது Vivo V30E ஸ்மார்ட்போனில் கிடைக்கிறது, ப்ளூடூத் 5.1, Wi-Fi 6, 5G மற்றும் USB Type C Port ஆனது போனில் கிடைக்கிறது.

இதையும் படிங்க:Samsung Galaxy F55 5G அறிமுகத்திற்க்கு முன்னே தகவல் லீக்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :