Vivo யின் 50MP செல்ஃபி கேமராவுடன் இந்தியாவில் அறிமுகம்

Updated on 07-Mar-2024
HIGHLIGHTS

Vivo V30 மற்றும் Vivo V30 Pro இந்தியாவில் மார்ச் 7 வியாழன் அன்று அறிமுகப்படுத்தப்பட்டது

Vivo ப்ளூ மற்றும் கிளாசிக் பிளாக் கலர் விருப்பங்களில் வழங்கப்படும்

விவோ இந்தியா இ-ஸ்டோர் மற்றும் பிற ஆஃப்லைன் ரீடைலர் விற்பனை நிலையங்களில் வாங்குவதற்கு கிடைக்கும்

Vivo V30 மற்றும் Vivo V30 Pro இந்தியாவில் மார்ச் 7 வியாழன் அன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இரண்டு மாடல்களும் சமீபத்தில் இந்தோனேசியாவில் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த போனில் 50 மெகாபிக்சல் முன் கேமரா மற்றும் 1.5K வளைந்த காட்சியுடன் வருகின்றன. அவை 80W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது மற்றும் ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான UI யில் வேலை செய்கின்றன. இரண்டு மாடல்களும் இந்த மாத இறுதியில் நாட்டில் விற்பனைக்கு கிடைக்கும்.

Vivo V30, V30 Pro யின் விலை மற்றும் விற்பனை தகவல்.

அந்தமான் ப்ளூ மற்றும் கிளாசிக் பிளாக் கலர் விருப்பங்களில் வழங்கப்படும், Vivo V30 Pro இந்தியாவில் ரூ.41,999 விலையில் 8ஜிபி + 256ஜிபி வேரியண்டின் விலை ரூ.41,999 முதல் தொடங்குகிறது. இதன் 12ஜிபி + 512ஜிபி வேரியன்ட் ரூ.46,999க்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

அதுவே மறுபுறம், மிகவும் குறைந்த விலையில் Vivo V30 அந்தமான் ப்ளூ, கிளாசிக் பிளாக் மற்றும் எக்ஸ்ட்ரா மயில் பச்சை நிறத்தில் வருகிறது. இது மூன்று கட்டமைப்புகளில் கிடைக்கிறது – 8GB + 128GB, 8GB + 256GB மற்றும் 12GB + 512GB, இதன் விலை முறையே ரூ.33,999, ரூ.35,999 மற்றும் ரூ.37,999. ஆகும்.

ஸ்மார்ட்போன்கள் மார்ச் 14 முதல் பிளிப்கார்ட், விவோ இந்தியா இ-ஸ்டோர் மற்றும் பிற ஆஃப்லைன் சில்லறை விற்பனை நிலையங்களில் வாங்குவதற்கு கிடைக்கும். மாடல்களுக்கான ப்ரீ ஆர்டர் மார்ச் 7 முதல் தொடங்கியுள்ளது.

ஆன்லைன் வாடிக்கையாளர்கள் SBI அல்லது HDFC கார்டுகளில் 10 சதவீத தள்ளுபடியைப் பெறலாம். கூடுதலாக, ஆறு மாதங்கள் வரையிலான நோ-காஸ்ட் EMI மற்றும் ரூ. 4,000 வரையிலான கூடுதல் எக்ஸ்சேஞ்ச் போனஸையும் பெறலாம். மெயின்லைன் ஸ்டோர்களில் வாங்குவதைத் தேர்ந்தெடுப்பவர்கள், 10 சதவீத உடனடி கேஷ்பேக், எட்டு மாதங்கள் வரை கட்டணமில்லா EMIகள் மற்றும் Vivoவின் V-ஷீல்டு திட்டங்களில் 40 சதவீதம் வரை தள்ளுபடி பெறலாம்.

V30, மற்றும் V30 Pro சிறப்பம்சம்

இந்த இரு போனிலும் 6.78-இன்ச் கர்வ்ட் 1.5K (2,800 x 1,260 பிக்சல் AMOLED டிஸ்ப்ளே வழங்குகிறது,, இரண்டு கைபேசிகளும் 120Hz ரெப்ரஸ் ரேட் 300Hz டச் வேரியன்ட் வீதம் மற்றும் 2,800 nits ஹை ப்ரைட்னாஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளன.

இந்த போனில் V30 Snapdragon 7 Gen 3 SoC உடன் வருகிறது V30 Pro மாடலில் MediaTek Dimensity 8200 சிப்செட்டில் வேலை செய்கிறது, இந்த போனில் 12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி வரை இன்டெர்னல் ஸ்டோரேஜ் சப்போர்ட் செய்கிறது இந்த போன்கள் ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான Funtouch OS 14 உடன் வருகிறது.

Vivo V30 யின் இரட்டை பின்புற கேமரா அலகு ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் (OIS) சப்பர்டுடன் 50-மெகாபிக்சல் ப்ரைமரி சென்சார் மற்றும் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸுடன் ஆரா லைட் ஃபிளாஷ் யூனிட்டுடன் 50-மெகாபிக்சல் செகண்டரி சென்சார் உடன் வருகிறது. Vivo V30 Pro ஆனது இதேபோன்ற கேமராக்களுடன் வருகிறது, ஆனால் கூடுதல் 50 மெகாபிக்சல் போர்ட்ரெய்ட் கேமராவைக் கொண்டுள்ளது. இரண்டு மாடல்களிலும் 50 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா உள்ளது.

இதையும் படிங்க: Samsung குறைந்த விலையில் தரமான Feature அறிமுகம் செய்தது

Vivo யின் வெண்ணிலா மாடல் மற்றும் Pro இரண்டு USB Type-C போர்ட் 80W வயர்ட் பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உடன் இதில் 5,000mAh பேட்டரி கொண்டுள்ளது, மாடல்களில் பாதுகாப்புக்காக இன்-டிஸ்ப்ளே பிங்கர்ப்ரின்ட் ஸ்கேனர் பொருத்தப்பட்டுள்ளது. அடிப்படை மாடல் புளூடூத் 5.4 ஐ ஆதசப்போர்ட் செய்கிறது அதே சமயம் ப்ரோ மாடலில் புளூடூத் 5.3 கனெக்டிவிட்டி சப்போர்ட் உள்ளது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :