Vivo வின் இந்த ஸ்டைலிஷான போனின் அறிமுக தேதி வெளியானது

Updated on 26-Feb-2024
HIGHLIGHTS

Vivo V30 சீரிஸ் வரும் நாட்களில் பல சந்தைகளில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது

பிப்ரவரி 28 அன்று, தாய்லாந்து மற்றும் இந்தோனேசியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்படும்.

இந்த V30 ஜோடி மார்ச் 7 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு நாட்டிற்குள் என்ட்ரிக்கு தயாராக உள்ளது.

Vivo V30 சீரிஸ் வரும் நாட்களில் பல சந்தைகளில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. பிப்ரவரி 28 அன்று, தாய்லாந்து மற்றும் இந்தோனேசியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்படும். மற்ற ஆசிய சந்தைகளும் அதே நேரத்தில் Vivo V30 மற்றும் Vivo V30 Pro ஆகியவற்றைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை, இந்த V30 ஜோடி மார்ச் 7 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு நாட்டிற்குள் என்ட்ரிக்கு தயாராக உள்ளது.

இந்த அப்கம்மிங் சீரிஸ் யின் லேண்டிங் பக்கமான ப்ளிப்கர்ட் மற்றும் விவோ இந்தியா வெப்சைட்டில் லைவ் செய்யப்பட்டுள்ளது, இரண்டு ஸ்மார்ட்போன்களின் சில முக்கிய சிறப்பம்சங்கள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ளன. V30 ஸ்மார்ட்போன் இந்தியாவில் மூன்று ஷேடில் வருகிறது; இது கிளாசிக் பிளாக், அந்தமான் ப்ளூ மற்றும் பீகாக் கிரீன் ஆகிய நிறங்களில் கிடைக்கும். வி30 ப்ரோவும் இதே போன்ற கலர்களில் கிடைக்கலாம் என்று தெரிகிறது. இரண்டு ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்கள் தகவல் வெளியாகியுள்ளது அவை என்ன என்பதை பார்க்கலாம்.

Vivo V30 Series எதிரிப்பர்க்கபடும் சிறப்பம்சம்.

விவோவின் இந்த இரண்டு போன்களிலும் 6.78 இன்ச் கர்வ்ட் எட்ஜ் AMOLED டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது, இதில் 1.5K ரேசளுசன் மற்றும் 120Hz ரெப்ராஸ் ரேட் வழங்குகிறது. முன்பக்கத்தில், இரண்டு சாதனங்களுக்கும் ஆட்டோஃபோகஸ் உடன் 50MP செல்ஃபி கேமரா வழங்கப்படலாம்.

இதையும் படிங்க:Google Pay ஆப் இந்த நாட்டில் இனி வேலை செய்யது

Vivo V30 போனில் OIS சப்போர்டுடன் 50MP மெயின் கேமரா 50MP அல்ட்ரா வைட் லென்ஸ் மற்றும் 2MP மற்ற சென்சார் வழங்கப்படுகிறது, மறுபுறம், Vivo V30 Pro ஆனது OIS உடன் 50MP Sony IMX920 ப்ரைமரி கேமரா, 50MP Sony IMX816 அல்ட்ரா-வைட் லென்ஸ் மற்றும் 3x ஆப்டிகல் ஜூம் கொண்ட 50MP டெலிஃபோட்டோ கேமரா ஆகியவற்றைப் பெற வாய்ப்புள்ளது. இரண்டு போன்களும் ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான Funtouch OS 14 யில் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

#Vivo V30

Vivo V30 மற்றும் V30 Pro வெறும் Snapdragon 7 Gen 3 மற்றும் Dimensity 8200 சிப்செட் உடன் வரும், இந்த சீரிஸில் 12GB வரையிலான LPDDR RAM மற்றும் 512GB வரையிலான UFS 3.1 ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது, இரண்டு போனிலும் 5000mAh பேட்டரியுடன் இருக்கலாம் இதனுடன் இதில் இது 80W ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்யும்..

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :