Vivo யின் இந்த போன் இந்திய சந்தையில் Vivo V30 ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு தொடக்கத்தில் அறிமுகம் செய்தது. இப்போது அடுத்த வாரம் V40 சீரிஸின் அறிமுகத்திற்கு முன்னதாக, பிராண்ட் அதிகாரப்பூர்வமாக Vivo V30 ஸ்மார்ட்போனின் விலையை குறைத்துள்ளது. Vivo V30 யில் கிடைக்கும் சிறப்பம்சங்கள் மற்றும் டிஸ்கவுன்ட் தகவலை பற்றி பார்க்கலாம்.
Vivo V30 யின் இப்பொழுது 8 ஜிபி + 128 ஜிபி வேரியன்ட் ரூ 31,999 யில் தொடங்குகிறது. அதேசமயம் 8ஜிபி + 256ஜிபி வகை ரூ.33,999க்கும், 12ஜிபி + 256ஜிபி வகை ரூ.35,999க்கும் கிடைக்கிறது. ஒவ்வொரு மாடலுக்கும் ரூ.2,000 வரை தள்ளுபடி கிடைக்கும். கூடுதலாக, வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட கார்டுகள் மூலம் பிளாட் 10% இன்ஸ்டன்ட் கேஷ்பேக் மற்றும் Vivo V-ஷீல்டு பாதுகாப்புத் திட்டம் போன்ற கூடுதல் நன்மைகளைப் பெறலாம். விவோ இந்த காலகட்டத்தில் 8 ஜிபி + 128 ஜிபி மாறுபாட்டில் 8 மாத கட்டணமில்லா EMI ஐ வழங்குகிறது. இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட், விவோவின் அதிகாரப்பூர்வ வெப்சைட் மற்றும் அனைத்து ரீடைலர் விற்பனைக் கடைகளிலும் இன்று ஆகஸ்ட் 1 முதல் புதிய விலை கிடைக்கும்.
Vivo V30 ஆனது 6.78-இன்ச் கர்வ்ட் AMOLED டிஸ்ப்ளே, 1.5K ரெசல்யூஷன் 2,800 x 1,260 பிக்சல்கள், 120Hz ரேப்ராஸ் ரேட் 20:9 ரேசியோ மற்றும் 2,800 nits ஹை ப்ரைட்னாஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மேலும் Vivo V30 ஆனது Snapdragon 7 Gen 3 ப்ரோசெசர் கொண்டுள்ளது.
இது 12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி வரை இன்டெர்னல் ஸ்டோரேஜ் உள்ளது. இந்த ஃபோன் ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான Funtouch OS 14 யில் வேலை செய்கிறது. இந்த Vivo ஸ்மார்ட்போனில் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்டுடன் 5,000mAh பேட்டரி உள்ளது. செக்யுரிட்டிகாக இதில் இன்-டிஸ்ப்ளே பிங்கர்ப்ரின்ட் ஸ்கேனர் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் IP54 ரேட்டிங்கை கொண்டுள்ளது, இது டஸ்ட்மற்றும் ரெசிஸ்டன்ட்பாதுகாப்பை உறுதி செய்கிறது.
கேமரா அமைப்பைப் பற்றி பேசுகையில், Vivo V30 இன் பின்புறம் f/1.88 துளை மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) ஆதரவுடன் 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா, f/2.0 துளை கொண்ட 50 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் கேமரா மற்றும் 2 f/2.4 மெகாபிக்சல் போர்ட்ரெய்ட் கேமரா வழங்கப்படுகிறது.
முன்புறத்தில், f/2.0 அப்ரட்ஜர் மற்றும் ஆட்டோஃபோகஸ் கொண்ட 50 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. கனெக்டிவிட்டி விருப்பங்களில் புளூடூத் 5.4, டூயல் 4ஜி VoLTE, USB டைப் C போர்ட், Wi-Fi 6, GPS, NFC மற்றும் 5G கனெக்டிவிட்டி ஆகியவை அடங்கும். டைமென்சன் பற்றி பேசுகையில், இந்த போனில் நீளம் 164.36 mm வைட் 75.1 மிமீ, திக்னஸ் 7.45 mm மற்றும் எடை 186 கிராம். ஆகும்
இதையும் படிங்க:POCO M6 Plus 5G இந்தியாவில் அறிமுகம் டாப் அம்சம் கேமராவில் இவ்ளோ விஷயமா