செல்ஃபி பிரியர்களா நீங்க அப்போ 50MP இந்த போனை பல ஆபருடன் வாங்கலாம்.

செல்ஃபி  பிரியர்களா நீங்க  அப்போ 50MP இந்த போனை பல ஆபருடன் வாங்கலாம்.
HIGHLIGHTS

Vivo V29e 5G ஐ இந்திய சந்தையில் ஆகஸ்ட் 28 அன்று அறிமுகப்படுத்தியது

Vivo V29e 5G செல்ஃபி கேமரா ஒரு 50MP சென்சார் ஆகும்

விற்பனை செப்டம்பர் 7 ஆம் தேதி தொடங்கும் என்றும் கூறப்பட்டது அதனை தொடர்ந்து இன்று முதல் இது பிளிப்கார்ட்டில் வாங்கலாம்

Vivo தனது லேட்டஸ்ட் ஸ்மார்ட்போனான Vivo V29e 5G ஐ இந்திய சந்தையில் ஆகஸ்ட் 28 அன்று அறிமுகப்படுத்தியது. இந்த ஸ்மார்ட்போன் அல்ட்ரா பிரீமியம் டிசைனுடன் வருகிறது மற்றும் அதன் செல்ஃபி கேமரா ஒரு 50MP சென்சார் ஆகும். அறிமுகப்படுத்தப்பட்ட நேரத்தில், இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை செப்டம்பர் 7 ஆம் தேதி தொடங்கும் என்றும் கூறப்பட்டது அதனை தொடர்ந்து இன்று முதல் இது பிளிப்கார்ட்டில் வாங்கலாம்  என்றும் நிறுவனம் உறுதிப்படுத்தியது. இந்த விற்பனையின் போது சில சிறந்த அறிமுக சலுகைகளும் வழங்கப்படுகின்றன.

Vivo V29e விலை மற்றும் அறிமுக சலுகைகள் 

Vivo V29e இன் 8GB + 128GB மற்றும் 8GB + 256GB ஆகிய இரண்டும் ரூ.5000 தள்ளுபடிக்குப் பிறகு பிளிப்கார்ட்டில் முறையே ரூ.26,999 மற்றும் ரூ.28,999க்கு பட்டியலிடப்பட்டுள்ளன. வங்கி சலுகையின் கீழ், பாங்க் ஆஃப் பரோடா கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளில் 10% தள்ளுபடி பெறலாம். HDFC மற்றும் SBI கிரெடிட்/டெபிட் கார்டு ட்ரேன்செக்சன் ரூ.2500 தள்ளுபடியும் கிடைக்கிறது. இது தவிர, Flipkart Axis Bank கார்டில் 5% கேஷ்பேக் கிடைக்கும்.

VIVO

மறுபுறம், உங்கள் பழைய ஸ்மார்ட்போனை Vivo V29eக்கு மாற்றினால், இங்கேயும் நீங்கள் ரூ.25,050 வரை தள்ளுபடி பெறலாம். ஆர்ட்டிஸ்டிக் ரெட் மற்றும் ஆர்ட்டிஸ்டிக் ப்ளூ வண்ண விருப்பங்களில் இந்த ஸ்மார்ட்போனை வாங்கலாம். நீங்கள் வாங்க வேண்டிய இந்த போனின் சிறப்பு என்ன என்பதை இப்போது தெரிந்து கொள்வோம்.

Vivo V29e யில் இருக்கு  சிறப்பம்சம் 

Vivo V29e யின் சிறப்பம்சங்கள் பற்றி பேசினால் இதில்  6.78 இன்ச் 3D  டிஸ்ப்ளே இருக்கிறது, இதில் 1300 நிட்ஸ் பீக்  ப்ரைட்னஸ்  மற்றும் 120Hz ரெப்ராஸ்  ரேட் கொண்டுள்ளது., மேலும் இந்த போனில் குவல்கம் ஸ்னேப்டிராகன் 695 ப்ரோசெசர் கொண்டுள்ளது

vivo v29e display

இந்த போனில் 8 GB ரேம்மற்றும் 256 GB ஸ்டோரேஜ்  கொண்டுள்ளது  இந்த போனின் கேமரா பற்றி பேசுகையில் இதில் 64MP + 8MP டுயள்  பின் கேமரா கொண்டுள்ளது மற்றும் இதில் செல்பிக்கு 50MP முன் கேமரா  கொடுக்கப்பட்டுள்ளது  இதை தவிர இந்த போனில்  5000mah பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.

vivo v29e camera

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo