Vivo V29 Series இந்தியாவில் அதிரடியாக அறிமுகம் Top5 Feature பாருங்க

Vivo V29 Series இந்தியாவில் அதிரடியாக அறிமுகம் Top5 Feature பாருங்க
HIGHLIGHTS

Vivo V29 மற்றும் Vivo V29 Pro ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த போனில் 50MP OIS கேமரா சென்சார் உள்ளது,

HDFC மற்றும் SBI கார்டுகளில் ஆன்லைனில் ரூ.3,500 தள்ளுபடியைப் பெற முடியும்.

Vivo இன்று Vivo V29 மற்றும் Vivo V29 Pro ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த போன்கள் வைப்ரேட் கவர் விருப்பங்களில் வருகின்றன. மேலும், சிறந்த கேமராவுடன் யூனிக ஸ்மார்ட் ஆரா லைட்டின் சப்போர்டுடன் ஃபோன் கொண்டுள்ளது. மேலும் இந்த போனில் 50MP OIS கேமரா சென்சார் உள்ளது, போன் ஆட்டோமேட்டிக் worm மற்றும் கூல் நிறங்களுக்கு இடையில் மாறுகிறது.

Vivo V29 Series விலை தகவல்.

Vivo V29 Pro யின் கலர் விருப்பத்தை பற்றி பேசுகையில் இது ஹிமாலயன் ப்ளூ மற்றும் சபேஷ் ப்ளூ கலர் விருப்பத்தில் வருகிறது, ஃபோனின் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.39,999, அதே சமயம் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வேரியன்ட் ரூ.42,999க்கு வருகிறது. Vivo V29 Pro விற்பனை அக்டோபர் 10 முதல் தொடங்கும், இதை Vivo e-store மற்றும் Flipkart உள்ளிட்ட ரீடைலர் விற்பனை கடைகளில் வாங்கலாம்.

Vivo V29 Series
Vivo V29 Series

Vivo V29 யின் விலை மற்றும் ஆபர்கள்.

Vivo V29 யின் இரண்டு கலர் விருப்பங்களில் வருகிறது, இது ஹிமாலயன் ப்ளூ மற்றும் மேஜிச்டிக் ரெட் மற்றும் ஸ்பேஸ் ப்ளூ கலர் விருப்பத்தில் வருகிறது,,இந்த போனின் விற்பனை அக்டோபர் 17 முதல் தொடங்கும். இதன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ. 32,999, அதே சமயம் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியன்ட் விலை ரூ.36,999.ஆகும்.

ஆபர் தகவல்.

Vivo V29 சீரிஸ் இரண்டு போனிலும் 10 சதவீத கேஷ்பேக்குடன் ரூ.4,000 மேம்படுத்தப்பட்ட போனஸை நீங்கள் அனுபவிக்க முடியும். HDFC மற்றும் SBI கார்டுகளில் ஆன்லைனில் அதே போனில் ரூ.3,500 தள்ளுபடியைப் பெற முடியும்.

Vivo V29 மற்றும் Vivo V29 Pro Top 5 அம்சம்.

டிஸ்ப்ளே

Vivo V29 மற்றும் Vivo V29 Pro பற்றி பேசினால்,இந்த இரண்டு போனிலும் உங்களுக்கு 6.78 இன்ச் Curved AMOLED டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது,இதை தவிர இதில் 120Hz ரெப்ராஸ் ரேட் கொண்டுள்ளது.

ப்ரோசெசர்

இது மட்டுமின்றி Vivo V29 ஆனது Snapdragon 778G ப்ரோசெசர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, இது தவிர Vivo V29 Pro ஆனது MediaTek Dimensity 8200 ப்ரோசெசர் யில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கேமரா

கேமரா பற்றி பேசுகையில், Vivo V29 ஆனது 50MP ப்ரைமரி கேமராவைக் கொண்டுள்ளது, இது OIS உடன் வருகிறது. கூடுதலாக, இந்த போனில் 8MP வைட்-ஆங்கிள் கேமரா மற்றும் 2MP பொக்கே லென்ஸ் உள்ளது. Vivo V29 Pro ஸ்மார்ட்போனில் 50MP ப்ரைமரி கேமரா உள்ளது. இது தவிர, போனில் 12MP போர்ட்ரெய்ட் லென்ஸ் மற்றும் 8MP வைட் ஆங்கிள் லென்ஸ் உள்ளது. இரண்டு போன்களிலும் 50MP Eye AFமுன் கேமரா உள்ளது.

பேட்டரி

இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் 80W ஃபிளாஷ் சார்ஜிங் ஆதரவுடன் பெரிய 4600mAh பேட்டரியைக் கொண்டுள்ளன.மேலும் இந்த இரு போனும் FunTouch OS 13 யில் வேலை செய்கிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo