Vivo V29 series யின் இந்திய அறிமுக தேதி அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது

Vivo V29 series யின் இந்திய  அறிமுக தேதி  அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது
HIGHLIGHTS

விவோ தனது புதிய ஸ்மார்ட்போன் சீரிஸை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது

Vivo V29 சீரிஸ் இந்தியாவில் அக்டோபர் 4 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படும்

இரண்டு மாடல்களிலும் 50 மெகாபிக்சல் முன் பெசிங் கேமரா இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விவோ தனது புதிய ஸ்மார்ட்போன் சீரிஸை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. இதனை சமீபத்திய டீசர் மூலம் நிறுவனம் உறுதி செய்துள்ளது. Vivo V29 சீரிஸ் இந்தியாவில் எப்போது அறிமுகப்படுத்தப்படும் என்பது பற்றிய தகவல் அதிகாரப்பூர்வமாகிவிட்டது. மைக்ரோசைட்டின் படி, Vivo V29 சீரிஸ் இந்தியாவில் அக்டோபர் 4 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படும். வரவிருக்கும் சாதனங்கள் Vivo V29 சீரிஸ் ஒரு பகுதியாக இருக்கும். வி29 சீரிஸின் புதிய போன்கள் விரைவில் வரும் என்று டீசரில் மட்டுமே கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவில் அக்டோபர் 4-ம் தேதி வெளியிடப்படும் என்று ஒரு அறிக்கை கூறுகிறது. நிறுவனம் வரவிருக்கும் போனின்  ஒரு பார்வையைக் காட்டியுள்ளது, அதில் கர்வ்ட் டிஸ்ப்ளே தெரியும்.

Vivo

Vivo V29 சீரிஸ்  யின் எதிர்ப்பார்க்கபடும் சிறப்பம்சம்.

Vivo V29 மற்றும் Vivo V29 Pro ஆகியவை உடலில் ஒரு சிறப்பு 3D துகள் வடிவமைப்புடன் வரும். இதன் தடிமன் 7.46 மிமீ மற்றும் எடை 186 கிராம். இந்த ஸ்மார்ட்போன்கள் ஹிமாலயன் ப்ளூ, மெஜஸ்டிக் ரெட் மற்றும் ஸ்பேஸ் பிளாக் என மூன்று நிறங்களில் வரும்.

Vivo V29 Pro கேமரா  பற்றி பேசினால், Sony IMX663 சென்சார் மற்றும் 12 மெகாபிக்சல் அல்ட்ராவைடு ஷூட்டர் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் ப்ரைமரி கேமரா சென்சார் 50 மெகாபிக்சல்களாக இருக்கலாம். இதில், நைட் போர்ட்ரைட்மற்றும் பொக்கே எஃபெக்ட் ஆரா லைட்டுடன் வழங்கப்படும். Vivo V29 பற்றி பேசுகையில், சாம்சங்கின் 50 மெகாபிக்சல் ISOCELL GN5 சென்சார் இதில் கொடுக்கப்படலாம். இதில் 8 மெகாபிக்சல் அல்ட்ராவைடு லென்ஸ் மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் ஆகியவை அடங்கும். இரண்டு மாடல்களிலும் 50 மெகாபிக்சல் முன் பெசிங் கேமரா இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Vivo v29

Vivo V29 யின் க்ளோபல் வெர்சனில் 120 ஹர்ட்ஸ் ரெப்ரஸ்  ரேட்  1.5K ரேசளுசன் மற்றும் HDR10+ சப்போர்டுடன் வருகிறது, இதில் 6.78 இன்ச் AMOLED டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. Qualcomm Snapdragon 778G SoC இதில் கிடைக்கிறது. இது ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான Funtouch OS கொண்டுள்ளது. போனில் அடிப்படை மாடலில் 80W சார்ஜிங் உடன் 4600mAh பேட்டரி உள்ளது.

Global Vivo V29 128GB அல்லது 256GB ஸ்டோரேஜ் உடன் வழங்கப்படலாம். இதனுடன், 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் வழங்கப்படும். மேலும், 12ஜிபி ரேம் மாறுபாடும் வழங்கப்படும். அதே வேரியண்ட் ப்ரோ வேரியண்டிலும் கொடுக்கப்படும்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo