Vivo V15 Pro உலகின் முதல் முறையாக 32MP Pop-up செல்பி கேமராவுடன் அறிமுகம்.

Updated on 20-Feb-2019
HIGHLIGHTS

Vivo V15 Pro இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது, இதை தவிர இதில் தெரியப்படுத்துவது என்னவென்றால் இந்த மொபைல் போனை ஒரு மிட் ரேன்ஜ் மொபைல் வடிவியில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது

 Vivo V15 Pro இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது, இதை தவிர இதில்  தெரியப்படுத்துவது  என்னவென்றால் இந்த மொபைல்  போனை ஒரு மிட் ரேன்ஜ்  மொபைல்  வடிவியில்  இந்திய சந்தையில்  அறிமுகம் செய்யப்பட்டது  மற்றும் இதன் விலை  Rs 28,990 ஆக  இருக்கிறது  உலகின்  முதல் முறையாக  32MP Pop-up  செல்பி கேமராவுடன் அறிமுகவது. 

விவோ வி15 ப்ரோ ஸ்மார்ட்போனில் நாட்ச்-லெஸ் டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. இத்துடன் ஸ்மார்ட்போனின் பின்புறம் மூன்று பிரைமரி கேமரா செட்டப், முன்புறம் பாப்-அப் ரக செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. இதனால் ஸ்மாபர்ட்போனின் கீழ்புறம் பெசல் எதுவும் காணப்படவில்லை.

இதனுடன் இந்த ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் மூலம்  மார்ச் 6 லிருந்து விற்பனைக்கு வருகிறது. இதை தவிர உங்களுக்கு  தெரியப்படுத்துவது  என்னவென்றால் இந்த மொபைல்  போனை நீங்கள் Vivo  வின் அதிகாரபூர்வ  வெப்சைட்டிலும் வாங்கி செல்லலாம் இந்த  மொபைல்  போனை நீங்கள்  ஆஃப்லைன்  கடைகளிலும் பெறலாம், இதன் அர்த்தம் நீங்கள் இந்த  ஸ்மார்ட்போனை  ஆன்லைன்  மற்றும் ஆஃப்லைன்  இரு முறையிலும் பெறலாம் 


Vivo V15 ப்ரோ சிறப்பம்சங்கள்:

– 6.39 இன்ச் 2340×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:5:9 சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
– 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 675 64-பிட் 11nm பிராசஸர்
– அட்ரினோ 612 GPU
– 6 ஜி.பி. ரேம்
– 128 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் ஃபன்டச் ஓ.எஸ். 9
– டூயல் சிம் ஸ்லாட்
– 48 எம்.பி. குவாட் பிக்சல் 1/2.25″ சென்சார், f/1.8 
– 5 எம்.பி. டெப்த் சென்சார், f/2.4
– 8 எம்.பி. ஏ.ஐ. சூப்பர் வைடு ஆங்கிள் கேமரா, f/2.4
– 32 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
– இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 3700 Mah . பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்


புதிய விவோ வி15 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.39 இன்ச் ஃபுல் HD . பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. வி15 ப்ரோ ஸ்மார்ட்போனில் 32 எம்.பி. பாப்-அப் ரக செல்ஃபி கேமரா வழங்கப்பட்டிருக்கிறது. இந்த கேமரா 0.46 நொடிகளில் மேலே எழும்புகிறது. இந்த அம்சம் சுமார் 3 லட்சம் முறை சோதனை செய்யப்பட்டதாக விவோ தெரிவித்துள்ளது. ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் சார்ந்த ஃபன்டச் ஓ.எஸ். 9 கொண்டிருக்கும் வி15 ப்ரோ ஸ்மார்ட்போனில் டூயல் டர்போ கேமிங் மோட், இஸ்போர்ட்ஸ் மோட் உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கிறது.

போட்டோ எடுக்க 48 எம்.பி. குவாட்-பிக்சல் கேமரா வழங்கப்பட்டிருக்கிறது. இந்த கேமரா 12 எம்.பி. தரத்திலான புகைப்படங்களை வழங்குகிறது. இத்துடன் 5 எம்.பி. டெப்த் சென்சார், 8 எம்.பி. வைடு ஆங்கிள் லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த கேமராவுடன் ஏ.ஐ. சூப்பர் நைட் மோட் வழங்கப்பட்டுள்ளது.

அறிமுக சலுகைகள்:

– விவோ வி15 ப்ரோ வாங்கும் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது 5 சதவிகித கேஷ்பேக்.

– ஸ்மார்ட்போன் வாங்கிய ஆறு மாதத்திற்குள் ஒரு முறை திரையை மாற்றிக் கொள்ளும் வசதி.

– நோ கோஸ்ட் EMI வசதி வழங்கப்படுகிறது .

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :