Vivo இந்தியாவில் Vivo T3x 5G ஸ்மார்ட்போனை ஏப்ரல் 17, 2024 அன்று அறிமுகப்படுத்த உள்ளது. இந்த போன் குறித்த ப்ரோசெசர் விலை ரேன்ஜ் உள்ளிட்ட சில விவரங்களை நிறுவனம் ஏற்கனவே வெளியிட்டுள்ளது. இப்போது அறிமுகத்திற்கு முன், விவோ இந்த வரவிருக்கும் கைபேசியின் பேட்டரி விவரங்களை உறுதிப்படுத்தியுள்ளது.
விவோ T3x 5G ஸ்மார்ட்போன் 6000mAh பேட்டரியை பேக் செய்யும் என்று வெளிப்படுத்தியுள்ளது, இது 44W ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்யும் மேலும் இதில் s6000mAh பேட்டரியுடன் வரும் T3x 5G இந்த பிரிவில் மிக மெல்லிய ஸ்மார்ட்போனாக இருக்கும் என்று நிறுவனம் கூறுகிறது. T3x திக்னஸ் 0.799cm இருக்கும்.
ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, Vivo இந்த போனை ஏப்ரல் 17 ஆம் தேதி அறிமுகப்படுத்த உள்ளது. இந்த சாதனத்தில் Snapdragon 6 Gen 1 செயலி பொருத்தப்பட்டிருக்கும். இந்த வரவிருக்கும் போன் இரட்டை பின்புற கேமரா அமைப்புடன் வரும், இது ஒரு வட்ட கேமரா மாட்யுல் வைக்கப்படும்.
இந்த ஸ்மார்ட்போன் செலஸ்டியல் கிரீன் மற்றும் கிரிம்சன் ப்ளீஸ் என இரண்டு வண்ண விருப்பங்களில் வரும். விலையைப் பொறுத்த வரையில் இந்த போனின் விலை ரூ.15000க்குள் வைக்கப்படும். இது தவிர, வரவிருக்கும் போன் பற்றிய வேறு எந்த விவரங்களையும் நிறுவனம் வெளியிடவில்லை.
இந்த Vivo போனனது 6000mAh பேட்டரியுடன் வரும் முதல் மெல்லிய போனாக இருக்கும் என்று வதந்திகள் தெரிவிக்கின்றன, இது ஒரு முறை சார்ஜ் செய்தால் இரண்டு நாட்கள் வரை நீடிக்கும். போட்டோ எடுப்பதற்காக, வரவிருக்கும் T3x 5G பின்புறத்தில் 50MP + 2MP கேமரா செட்டிங் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த போனில் முன்பக்கத்தில் 8MP செல்ஃபி ஷூட்டர் இருக்கலாம்.
மேலும், வரவிருக்கும் Vivo சாதனம் முழு HD+ தீர்மானம் மற்றும் 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் 6.72-இன்ச் எல்சிடி திரையுடன் பொருத்தப்பட்டிருக்கும். இது தவிர, இந்த ஸ்மார்ட்போன் ஆடியோ பூஸ்டர் சப்போர்டுடன் இரட்டை ஸ்டீரியோ ஸ்பீக்கர்களுடன் வர வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க அரசு USSD அடிப்படையிலான கால்களை அதிரடியாக நிறுத்தம்