Vivo T3 Pro 5G போன் அறிமுகம் இதன் டாப் அம்சங்களை பாருங்க

Vivo T3 Pro 5G போன் அறிமுகம் இதன் டாப் அம்சங்களை பாருங்க
HIGHLIGHTS

Vivo அதன் புதிய T-சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது

Vivo T3 Pro 5G இந்த போனில் ஸ்னப்டிராகன் 7 ஜென் 3 ப்ரோசெசர் வழங்கப்படுகிறது

இதன் விலை மற்றும் டாப் அம்சங்கள் பார்க்கலாம் வாங்க

Vivo அதன் புதிய T-சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது, இந்த வரிசையின் கீழ் Vivo T3 Pro 5G இந்த போனில் ஸ்னப்டிராகன் 7 ஜென் 3 ப்ரோசெசர் வழங்கப்படுகிறது இந்த பிரிவில் இது மிகவும் தெளிவான ப்ரைட்னாஸ் மற்றும் மெல்லிய கர்வ்ட் போன் என்று நிறுவனம் கூறுகிறது. இதன் முக்கிய அம்சங்களில் 120Hz டிஸ்ப்ளே, டிசைன் ,சோனி IMX882 OIS கேமரா மற்றும் பிற உள்ளன. மேலும் இதன் விலை மற்றும் டாப் அம்சங்கள் பார்க்கலாம் வாங்க

Vivo T3 Pro 5G யின் டாப் அம்சம்

டிசைன்

இந்த போனின் டிசைன் பற்றி பேசினால் நேர்த்தியான மற்றும் கர்வ்ட் டிசைனை வழங்குகிறது. Vivo T3 Pro இரண்டு கலர் விருப்பங்களில் வருகிறது: andstone Orange மற்றும் Emerald Green சாண்ட்ஸ்டோன் ஆரஞ்சு விருப்பமானது வீகன் லெதர் பிநிசுடன் வருகிறது, அதே சமயம் எமரால்டு கிரீன் வேரியன்ட் மேட் பினிஷுடன் வருகிறது.

டிஸ்ப்ளே

இந்த போனின் டிஸ்ப்ளே பற்றி பேசினால் இதில் AMOLED Curved டிஸ்ப்ளே உடன் இதில் 120Hz ரெப்ரஸ் ரேட்டுடன் வருகிறது மேலும் இதில் 4500 நித்ஸ் ப்ரைட்னாஸ் இருக்கிறது

ப்ரோசெசர்

Vivo T3 Pro 5G ஸ்மார்ட்போனில் Snapdragon 7 Gen 3 ப்ரோசெசர் இருக்கப் போகிறது, இது தவிர, நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த ஃபோன் பிரிவில் முதல் வேகமான கர்வ்ட் போனாக இருக்கும்.

கேமரா

போட்டோ எடுப்பதற்காக, Vivo T3 Pro 5G இரட்டை பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இந்த கேமரா அமைப்பில் 50MP பிரைமரி கேமரா மற்றும் 8MP வைட் ஆங்கிள் கேமரா உள்ளது. முன்பக்கத்தில், 16MP செல்ஃபி ஷூட்டர் உள்ளது. AI போட்டோ அப்டேட் மற்றும் AI எரேசர் போன்ற AI அம்சங்களையும் வழங்குகிறது

பேட்டரி

இந்த போனின் பேட்டரி பற்றி பேசுகையில் Vivo T3 Pro 5G யில் 5500mAh பேட்டரியுடன் 80W சார்ஜிங் போர்டுடன் வருகிறது.

மேலும் இந்த போனில் குறிபிடத்தக்க விஷயம் என்னவென்றால் IP64 ரேட்டிங் டஸ்ட் மற்றும் தண்ணிரில் இருந்து பாதுகாக்கிறது மேலும் இது FunTouch OS 14 அடிபடையின் கீழ் Android 14 டுயல் சீரிஸ், ஸ்ட்ரீரியோ ஸ்பீக்கர், அல்ட்ரா கேம் மோட் மற்றும் டச் டேக்நோலாஜி உடன் வருகிறதுபேட்டரி

Vivo T3 pro 5G விலை தகவல்

Vivo T3 pro 5G விலை பற்றி பேசினால் இது 8ஜிபி+128ஜிபி மற்றும் 8ஜிபி+256ஜிபி. 8ஜிபி+128ஜிபி வகையின் விலை ரூ.24,999. மறுபுறம், 8GB+256GB வேரியண்டின் விலை ரூ.26,999. ஆகும் இதன் விற்பனை செப்டம்பர் 3 அன்று Flipkart மற்றும் அதிகாரபூர்வ வெப்சைட்டில் நடைபெறும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo