Vivo யின் அசத்தல் கேமரா உடன் அறிமுகம் OIS-அசிஸ்டன்ட் சப்போர்ட் இருக்கும்

Updated on 21-Mar-2024
HIGHLIGHTS

Vivo இந்திய சந்தையில் Vivo T3 ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.

Vivo T2 ஐ மாற்றும். இந்த ஃபோனில் OIS-அசிஸ்டன்ட் சோனி IMX882 ப்ரைமரி கேமரா மற்றும் 16-மெகாபிக்சல் செல்ஃபி கேமரா உள்ளது

Vivo T3 யின் சிறப்பம்சங்கள் மற்றும் விலை பற்றிய முழு விவரங்களை பற்றி பார்க்கலாம்.

Vivo இந்திய சந்தையில் Vivo T3 ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. நிறுவனத்தின் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போனில் 6.67 இன்ச் AMOLED டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. Vivo T3 ஆனது கடந்த ஆண்டு Vivo T2 ஐ மாற்றும். இந்த ஃபோனில் OIS-அசிஸ்டன்ட் சோனி IMX882 ப்ரைமரி கேமரா மற்றும் 16-மெகாபிக்சல் செல்ஃபி கேமரா உள்ளது. Vivo T3 யின் சிறப்பம்சங்கள் மற்றும் விலை பற்றிய முழு விவரங்களை பற்றி பார்க்கலாம்.

Vivo T3 5G விலை மற்றும் விற்பனை தகவல்

Vivo T3 யின் 8 ஜிபி + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ. 19,999 மற்றும் 8 ஜிபி + 256 ஜிபி ஸ்டோரேஜ் வகையின் விலை ரூ.21,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் காஸ்மிக் ப்ளூ மற்றும் கிரிஸ்டல் ஃப்ளேக் ஆகிய நிறங்களில் கிடைக்கிறது. இந்த தயாரிப்பு மார்ச் 27 மதியம் 12 மணி முதல் வாங்குவதற்கு கிடைக்கும். இது Vivo.com, Flipkart மற்றும் நாடு முழுவதும் உள்ள சில்லறை விற்பனை கடைகள் மூலம் வாங்கப்படும். HDFC பேங்க் மற்றும் SBI கிரெடிட் கார்டுகள் மூலம் ட்ரேன்செக்சன் செய்தால் 2,000 ரூபாய் இன்ஸ்டன்ட் தள்ளுபடி கிடைக்கும்.

Vivo T3 சிறப்பம்சம்

Vivo T3 ஆனது 6.67 இன்ச் AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது, அதன் தீர்மானம் 2400 x 1080 பிக்சல்கள், 394 ppi, 120Hz ரெப்ராஸ் ரேட் 1800 nits ஹை ப்ரைட்னாஸ் ஸ்டேட்டஸ் இந்த போனில் MediaTek Dimesnity 7200 ப்ரோசெசர் உள்ளது.

#Vivo T3 smartphone

இந்த போனில் LPDDR4x ரேம் மற்றும் UFS 2.2 ஸ்டோரேஜ் உள்ளது. இது 44W வயர்டு சார்ஜிங்கை ஆதரிக்கும் 5,000mAh பேட்டரியுடன் பொருத்தப்பட்டுள்ளது. Vivo T3 ஒரு பிளாஸ்டிக் பில்ட் கொண்டுள்ளது. இது ஒரு சாப்ட் பிரேம் கொண்டுள்ளது மற்றும் மூன்று பின்புற கேமராக்கள் சற்று மேலே ரெக்டங்குளர் ஐலேன்ட் வைக்கப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான Funtouch OS 14 யில் வேலை செய்கிறது.

கேமரா செட்டிங் பற்றி பேசினால், இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் OIS-அசிஸ்டன்ட் Sony IMX882 ப்ரைமரி கேமரா, 2 மெகாபிக்சல் டெப்த் கேமரா மற்றும் ஒரு ஃப்ளிக்கர் சென்சார் ஆகியவை அடங்கும். இதன் முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா உள்ளது. இது தவிர, ஸ்மார்ட்போனில் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், இன்-ஸ்கிரீன் பிங்கர்ப்ரின்ட் சென்சார், மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் மற்றும் ஐபி54 ரேட்டிங் உள்ளது. இணைப்பு விருப்பங்களில் டூயல் சிம், 5ஜி, வைஃபை 6, புளூடூத் 5.3, ஜிஎன்எஸ்எஸ் மற்றும் யுஎஸ்பி டைப்-சி ஆகியவை அடங்கும்.

இதையும் படிங்க :OTT Release: இந்த வார அட்டகாசமான படங்கள் உங்கள் குடும்பத்துடன் பார்த்து மகிழுங்கள்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :