Vivo T2 vs Redmi Note 12 vs Realme 10 Pro ஒப்பிட்டு பார்த்ததில் எது பெஸ்ட்?

Vivo T2 vs Redmi Note 12 vs Realme 10 Pro ஒப்பிட்டு பார்த்ததில் எது பெஸ்ட்?
HIGHLIGHTS

Vivo T2 போனை இந்தியாவில் மிட் ரேன்ஜ் 5G போனாகும் இந்த ஸ்மார்ட்போன் ரூ.20,000 பிரிவில் இடம் பெற்றுள்ளது.

ன்று நாம் Vivo T2 யின் சிறப்பம்சங்களை Redmi Note 12 மற்றும் realme 10 Pro உடன் ஒப்பிட்டு பார்க்கலாம்

Realme 10 Pro செப்டம்பரில் அறிமுகம் செய்யப்பட்டது

Vivo T2 போனை இந்தியாவில்  மிட் ரேன்ஜ்  5G போனாகும் இந்த ஸ்மார்ட்போன் ரூ.20,000 பிரிவில் இடம் பெற்றுள்ளது. இருப்பினும், பல நிறுவனங்கள் இந்த விலையில் சிறந்த ஸ்மார்ட்போன்களை வழங்குகின்றன. இன்று நாம் Vivo T2 யின் சிறப்பம்சங்களை Redmi Note 12 மற்றும் realme 10 Pro உடன் ஒப்பிட்டு பார்க்கலாம் இதில் எது பெஸ்ட் என்று.தெரிஞ்சிக்கலாம்.

Vivo T2 vs Redmi Note 12 vs Realme 10 Pro: விலை தகவல்.

Vivo T2 5G இரண்டு வேரியண்டில் வழங்குகிறது, இந்த டிவைஸில் 6GB+128GB ஸ்டோரேஜின் விலை 18,999 ரூபாயில் இருக்கிறது மற்றும் 8GB+128GB ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை 20,000 ரூபாயாக இருக்கிறது.

 Realme 10 Pro செப்டம்பரில் அறிமுகம் செய்யப்பட்டது, இது இரண்டு வேரியண்டில் வருகிறது, இந்த டிவைஸின் அடிப்படை வேரியண்ட்  6GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜுடன் வருகிறது. இதன் விலை ரூ.18,999. இது தவிர 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் மாடல் ரூ.19,999க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Redmi Note 12 5G பற்றி பேசினால், அதன் 4GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ.17,999 ஆகும், அதே சமயம் 6GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.19,999க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Vivo T2 vs Redmi Note 12 vs Realme 10 Pro: Display 

Vivo T2 யில் 6.38 இன்ச் முழு  HD+ AMOLED டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது, இது 90Hz ரெப்ரஸ் ரேட் மற்றும் 1300 nits பிரைட்னஸ் வழங்குகிறது 

Redmi Note 12 5G யில் 6.67 இன்ச் AMOLED டிஸ்பிளே வழங்குகிறது, இது  HD+ ரெஸலுசன் வழங்குகிறது மற்றும் இது 120Hz ரெப்ரஸ் ரேட்  கொண்ட ஸ்க்ரீன் 1200 நிட்ஸ்  மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 ப்ரொடெக்சன் கொடுக்கப்பட்டுள்ளது.

அதுவே இதன் மறுபுறம், Realme 10 Pro பற்றி பேசுகையில், இந்த போனின் 6.72 இன்ச் ஸ்க்ரீனை பெறலாம், இது 120Hz அப்டேட் வீதத்தைக் கொண்டிருக்கும். இதன் ஹை ப்ரைட்னஸ் 680 நிட்களாக இருக்கும்

Vivo T2 vs Redmi Note 12 vs Realme 10 Pro: Performance 

Vivo T2 போனில் ஸ்னாப்ட்ரகன் 695 5G சிப்செட் மூலம் இயங்குகிறது மற்றுமிதில் 8GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த போன் ஆண்ட்ராய்டு 13 அடிப்படையில் Funtouch OS 13 யில் வேலை செய்கிறது.

Redmi Note 12 5G ஆனது Snapdragon 4 Gen 1 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது மற்றும் சாதனமானது Android 12 அடிப்படையிலான MIUI 13 யில் இயங்குகிறது.

Realme 10 Pro  வில் ஸ்னாப்ட்ரகன் 695 சிப்செட்டில் வேலை செய்கிறது மற்றும் இது ஆண்ட்ராய்டு 13 யில் Realme UI 4.0 யில் வேலை செய்கிறது.

Vivo T2 vs Redmi Note 12 vs Realme 10 Pro: Cameras

Vivo T2 5G யில் 64MP  மெயின் கேமரா மற்றும் 2MP டெப்த் கேமரா வழங்கப்படுகிறது இதன் ப்ரைம் கேமராவிற்கு OIS சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. 16எம்பி முன்பக்க கேமரா செல்ஃபிக்கு கிடைக்கிறது.

Redmi Note 12 ஆனது மூன்று பின்புற கேமரா செட்டிங் வழங்குகிறது, இதில் 48MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் மற்றும் 2MP மேக்ரோ லென்ஸ் ஆகியவை கிடைக்கின்றன. சாதனம் செல்ஃபிக்காக 13MP முன் கேமராவைப் வழங்குகிறது..

Realme 10 Pro இரட்டை கேமரா செட்டிங்கை வழங்குகிறது, இதில் 108MP மற்றும் 2MP சென்சார் கிடைக்கிறது. செல்ஃபி மற்றும் வீடியோ காலுக்காக 16எம்பி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது

Vivo T2 vs Redmi Note 12 vs Realme 10 Pro: Battery

Vivo T2 5G யில் 4,500mAh யின் பேட்டரி வழங்கப்படுகிறது,இது 44W  பாஸ்ட் சார்ஜிங் வழங்கப்படுகிறது.

Redmi Note 12 மற்றும் Realme 10 Pro இந்த இரண்டு போனை பற்றி பேசினால் 5,000mAh பேட்டரி   வழங்கப்படுக்கிறது,  இதனுடன் இது 33W பாஸ்ட் கிர்ஜின்க சப்போர்ட் செய்கிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo