சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான விவோ தனது T2 5G சீரிஸை ஏப்ரல் 11 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளது. இதில் Vivo T2 5G மற்றும் Vivo T2x 5G ஸ்மார்ட்போன்கள் அடங்கும். இது கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட Vivo T1 சீரிஸை மாற்றும். புதிய ஸ்மார்ட்போன்கள் பற்றிய சில தகவல்கள் Flipkart microsite யில் கிடைக்கின்றன. நிறுவனம் தங்கள் வடிவமைப்பைக் குறிப்பிட்டுள்ளது. இவற்றில் Snapdragon SoC பயன்படுத்தப்பட்டுள்ளது.
புதிய விவோ T2 சீரிசில் விவோ T2 5ஜி மற்றும் விவோ T2X 5ஜி என இரண்டு மாடல்கள் இடம்பெற்றுள்ளன. விவோ T2 ஸ்மார்ட்போன்களின் முதல் டீசரில் FHD+ AMOLED, 1300 நிட்ஸ் பிரைட்னஸ் கொண்ட ஸ்கிரீன் வழங்கப்படுகிறது. இத்துடன் டிஸ்ப்ளே நாட்ச் உள்ளது. தோற்றத்தில் இது ஐகூ Z7 5ஜி போன்றே காட்சியளிக்கிறது.
இத்துடன் 4 ஜிபி, 6 ஜிபி மற்றும் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வழங்கப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போன்கள் பற்றிய கூடுதல் விவரங்கள் வரும் நாட்களில் வெளியாகும் என விவோ அறிவித்து இருக்கிறது.
புதிய விவோ T2 5ஜி மற்றும் விவோ T2X 5ஜி மாடல்கள் இந்தியாவில் ப்ளிப்கார்ட் மற்றும் விவோ அதிகாரப்பூர்வ வலைதளத்தில் விற்பனை செய்யப்பட உள்ளன. புதிய ஸ்மார்ட்போன்களின் விலை ரூ. 20 ஆயிரத்திற்கும் குறைவாகவே நிர்ணயம் செய்யப்படும் என்றும் விவோ உறுதிப்படுத்திவிட்டது.
அந்த வகையில், இந்த ஸ்மார்ட்போன் ஐகூ Z7 5ஜி ஸ்மார்ட்போனின் ரிபிராண்டு செய்யப்பட்ட வெர்ஷனாக இருக்கும் என கூறப்படுகிறது. விவோ T2X 5ஜி மாடல் முற்றிலும் புதிய ஸ்மார்ட்போனாக இருக்கும் என தெரிகிறது. இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் விவோ T2X 5ஜி மாடலில் FHD+ ஸ்கிரீன், டிமென்சிட்டி 700 பிராசஸர் வழங்கப்படுகிறது