Vivo வின் சப் பிராண்ட் IQOO யின் முதல் போன் ஒரு ப்ளாக்ஷிப் சாதனமாக இருக்கும் நிறுவனம் ஒரு டீசர் யின் தகவலின் படி இந்த சாதனத்தில்; குவல்கம் ஸ்னாப்ட்ரகன்855 ப்ரோசெசர் 12GBரேம் மற்றும் 256GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது. நிறுவனத்தின் டீசர் போஸ்டர் அதன் அதிகாரபூர்வ வெபோ (webo ) அக்கவுண்ட் மூலம் ஸர் செய்யப்பட்டுள்ளது. அதன் மூலம் இந்த சாதனத்தில் சிறந்த சிறப்பசங்களை கொண்டிருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 12GB ரேம் உடன் இந்த போன் Lenovo G5 Pro GT, Xiaomi Mi 9 உடன் ட்ரான்ஸ்பேட் பேக் மற்றும் வதந்தி யின் Samsung Galaxy S10+ ஸ்பெஷல் எடிசனுக்கு இதில் சேர்க்கப்படும்
Vivo வின் சப் பிராண்டான IQ இந்தியாவில் புதிய ஸ்மார்ட்போனினை மார்ச் 1 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போனிற்கு பல்வேறு டீசர்களை IQ வெளியிட்டு வந்த நிலையில், தற்சமயம் இதன் வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஐகூவின் இந்த ஸ்மார்ட்போனில் 44 வாட் ஃபிளாஷ் சார்ஜ் வசதியும், 4000 Mah . பேட்டரியும் வழங்கப்படுகிறது. யு.எஸ்.பி. டைப்-சி, சூப்பர் HDR., என்.எஃப்.சி. உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
போட்டோக்கள் எடுக்க மூன்று பிரைமரி கேமரா செட்டப் வழங்கப்படலாம் என தெரிகிறது. இத்துடன் 4டி கேமிங் வசதியும், சூப்பர் HDR வசதியும் வழங்கப்படுகிறது. முன்னதாக பென்ச்மார்க்கிங் தளங்களில் வெளியான தகவல்களில் புதிய ஐகூ ஸ்மார்ட்போன் V1824A என்ற மாடல் நம்பரில் உறுவாகி வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இத்துடன் புதிய IQ ஸ்மார்ட்போனில் 4டி ஷாக் அம்சம் வழங்கப்படுகிறது. முந்தைய டீசர்களை போன்று புதிய டீசரிலும் புதிய ஸ்மார்ட்போனில் இன்-ஸ்கிரீன் கைரேகை சென்சார் வழங்கப்படும் என்றும் இது ஆறாம் தலைமுறையை சார்ந்தது என கூறப்படுகிறது. அந்த வகையில் இதுவரை வெளியாகி இருக்கும் இன்-ஸ்கிரீன் கைரேகை சென்சார்களை விட அதிவேகமாக இயங்கும் என எதிர்பார்க்கலாம்.
இதன் டிஸ்ப்ளே ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 2340×1080 பிக்சல்களை கொண்டிருக்கும். புதிய ஐகூ ஸ்மார்ட்போன் 12 ஜி.பி. ரேம் தவிர 8 ஜி.பி. ரேம் மற்றும் 128 ஜி.பி. வேரியண்ட் ஒன்றும் அறிமுகமாகும் என தெரிகிறது