Vivo S18 official teaser லீக் மிக சிறந்த டிசைன் கொண்டிருக்கும்

Updated on 01-Dec-2023
HIGHLIGHTS

Vivo S18 சீரிஸ் விரைவில் சீனாவில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த அப்கம்மிங் வரிசையில் Vivo S18 மற்றும் S18 Pro ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்கள் இருக்கலாம்.

இப்போது, ​​​​நிறுவனம் S18 மாடலின் டீஸர் படத்தைப் பகிர்ந்துள்ளது.

Vivo S18 சீரிஸ் விரைவில் சீனாவில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அப்கம்மிங் வரிசையில் Vivo S18 மற்றும் S18 Pro ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்கள் இருக்கலாம். சமீபத்தில் இந்த ஸ்மார்ட்போன்களின் முக்கிய சிறப்பம்சங்கள் லீக் ஆகியுள்ளன இப்போது, ​​​​நிறுவனம் S18 மாடலின் டீஸர் படத்தைப் பகிர்ந்துள்ளது.

Vivo S18 Teaser Details

இந்த டீஸர் படத்தை Vivo தயாரிப்புகளின் துணைத் தலைவர் Ouyang Weifeng, சீன மைக்ரோ-பிளாக்கிங் தளமான Weibo யில் பகிர்ந்துள்ளார். வரவிருக்கும் Vivo S18 ஓரியண்டல் மலர் கலை தீம்களால் ஈர்க்கப்பட்ட புதிய “ஃப்ளவர் லைக் ப்ரோகேட்” நிறத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்று டீஸர் வெளிப்படுத்தியது.

டீஸர் படத்தில் போனின் பின்புறத்தில் ஒரு ரெக்டங்குளர் கேமரா மாட்யுளை காணலாம். Vivo S18 OIS ஐ ஆதரிக்கும் மூன்று கேமரா செட்டிங் கொண்டிருக்கும். கூடுதலாக, இந்த அமைப்பில் LED ஃபிளாஷ் மற்றும் மென்மையான ஒளியும் சேர்க்கப்படும். இந்த சாப்ட் லைட் LEDப்ளாஷ் பக்கத்தில் வைக்கப்படும்.

S18 Specs (Expected)

இதுவரை வந்த வதந்திகள் S18 ஸ்மார்ட்போன் மாடல் 2800 நைட்ஸ் பிரகாசத்தை வழங்கும் பஞ்ச்-ஹோல் டிஸ்ப்ளேவுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த போனில் Snapdragon 7 Gen 3 ப்ரோசெசர் பொருத்தப்பட்டிருக்கும்.

இந்த போனில் 8 ஜிபி, 12 ஜிபி மற்றும் 16 ஜிபி ரேம் வகையில் கிடைக்கும்முறையே 256 ஜிபி அல்லது 512 ஜிபி உள் ஸ்டோரேஜ் வரும் என கூறப்படுகிறது . போட்டோ எடுப்பதற்கு, இதில் 50MP ப்ரைமரி கேமரா இருக்கலாம்.

இதையும் படிங்க: Redmi K70 Pro ஸ்மார்ட்போன் அறிமுகம், 50MP கேமரா கொண்டிருக்கும்

மறுபுறம், S18 ப்ரோ மாடலில் Dimensity 9200+ சிப்செட் பொருத்தப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது 50MP ப்ரைம் கேமராவுடன் வரலாம். ப்ரைம் கேமரா 50MP அல்ட்ரா-வைட் லென்ஸ் மற்றும் டெலிஃபோட்டோ கேமராவால் சப்போர்ட் செய்யலாம் இந்த ஃபோனில் 5000mAh பேட்டரியும் வழங்கப்படலாம், இது 80W சார்ஜிங்கை ஆதரிக்கும்.

S18 மாடல் விவோ வி30 ஆகவும், எஸ்18 ப்ரோ மாடலை விவோ வி30 ப்ரோவாகவும் உலகளவில் வெளியிடலாம் என்றும் செய்திகள் வருகின்றன.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :