Vivo S18, S18 Pro மற்றும் S18e அறிமுகம், 16GB ரேம் கொண்டிருக்கும்

Updated on 15-Dec-2023
HIGHLIGHTS

நிறுவனம் தனது உள்நாட்டு சந்தையில் Vivo S18 சீரிஸை அறிமுகப்படுத்தியுள்ளது

புதிய வரிசையில் Vivo S18, S18 Pro மற்றும் S18e ஆகியவை அடங்கும்.

S18 மற்றும் S18 Pro கேமரா மாட்யுல் முற்றிலும் புதிய தோற்றம் கொடுக்கப்பட்டுள்ளது

நிறுவனம் தனது உள்நாட்டு சந்தையில் Vivo S18 தொடரை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய வரிசையில் Vivo S18, S18 Pro மற்றும் S18e ஆகியவை அடங்கும். புதிய தொடருடன், Vivo டிசைன் பெக்டரிலும் பெரிய மாற்றங்களைச் செய்துள்ளது. S18 மற்றும் S18 Pro கேமரா மாட்யுல் முற்றிலும் புதிய தோற்றம் கொடுக்கப்பட்டுள்ளது, இதில் வெர்டிக்கள் அமைக்கப்பட்ட இரண்டு பெரிய சதுர பாக்ஸ் உள்ளன.

இந்த பாக்ஸில்ஒன்றில் கேமரா சென்சார்கள் பொருத்தப்பட்டு மற்றொன்றில் ஃபிளாஷ் வைக்கப்பட்டுள்ளது. S18 மற்றும் S18 Pro மாதிரிகள் 6.78-இன்ச் கர்வ்ட் OLED டிஸ்ப்ளேகளுடன் வருகின்றன, அதே நேரத்தில் குறைந்த விலையில் S18e மாடல் 6.67-இன்ச் AMOLED டிஸ்ப்ளேவைப் வழங்குகிறது இந்த மூன்று மாடல்களும் வெவ்வேறு ப்ரோசெசருடன் பொருத்தப்பட்டுள்ளன. இருப்பினும், அனைத்திலும் ஆண்ட்ராய்டு 14 மற்றும் 80W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் அடிப்படையிலான OriginOS 4 உள்ளது.

Vivo S18, S18 Pro, S18e

Vivo S18, S18 Pro, S18e இல்லை மற்றும் விற்பனை தகவல்.

சீனாவில் Vivo S18 யின் ஆரம்ப விலை 2,299 யுவான் (சுமார் ரூ. 27,100), இதில் இது 8GB + 256GB ஸ்டோரேஜ் வேரியண்டில் வருகிறது. இந்த போன் 12ஜிபி + 256ஜிபி, 12ஜிபி + 512ஜிபி மற்றும் 16ஜிபி + 512ஜிபி ஸ்டோரேஜ் வகைகளிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Vivo S18 Pro யின் அடிப்படை 12GB + 256GB ஸ்டோரேஜ் மாடலின் விலை 3,199 யுவான் (தோராயமாக ரூ. 37,700) ஆகும். இந்த போனை 16GB + 256GB மற்றும் 16GB + 512GB மாடல்களிலும் வாங்கலாம்.

இறுதியாக Vivo S18e வருகிறது, அதன் அடிப்படை 12GB + 256GB மாடலின் விலை சீனாவில் 2,099 யுவான் (சுமார் ரூ. 24,700) ஆகும். அதன் மற்றொரு வேரியன்ட் 12GB + 512GB கான்பிக்ரேசனில் வருகிறது.

Vivo S18 யின் முதல் விற்பனை டிசம்பர் 22 அன்று சீனாவில் தொடங்கும், அதே நேரத்தில் S18 Pro மற்றும் S18e விற்பனை ஜனவரி 13, 2024 அன்று நடைபெறும். நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டிலிருந்து இருந்து இவற்றை வாங்கலாம்.

S18, S18 Pro, S18e சிறப்பம்சம்

Vivo S18, S18 Pro மற்றும் S18e ஆகிய மூன்று ஸ்மார்ட்போன்களும் ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான OriginOS 4 யில் வேலை செய்கின்றன. S18 மற்றும் S18 Pro ஆனது 6.78-இன்ச் கர்வ்ட் OLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது, இது FHD+, 120Hz ரெப்ராஸ் ரேட் மற்றும் 2800 nits ஹை ப்ரைட்னஸ் வழங்குகிறது. S18e ஆனது 2400×1080 ரேசளுசன் மற்றும் அதே 120Hz ரெப்ராஸ் ரேட்டுடன் 6.67-இன்ச் AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது.

மூன்று மாடல்களிலும் வெவ்வேறு ப்ரோசெசர் உள்ளன. S18 ஆனது Qualcomm Snapdragon 7 Gen 3 SoC உடன் வருகிறது, S18 Pro மற்றும் S18e ஆகியவை முறையே MediaTek Dimensity 9200+ மற்றும் Dimensity 7200 சிப்செட்களை உள்ளடக்கியது. மூன்று போன்களும் வெவ்வேறு ஸ்டோரேஜ் விருப்பங்களுடன் 16ஜிபி வரை ரேம் உடன் வருகின்றன.

Vivo S18 series

கேமரா செட்டப் பற்றி பேசினால்,இதில் வெவ்வேறு கேமரா இருக்கிறது S18 யில் 50MP ப்ரைம் கேமரா மற்றும் 8MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் ஷூட்டர் ஆகியவை அடங்கும். அதே நேரத்தில், S18 Pro 50MP ப்ரைமரி சென்சார், 50MP அல்ட்ரா-வைட் லென்ஸ் மற்றும் 12MP டெலிஃபோட்டோ ஷூட்டரைக் கொண்டுள்ளது, அதே நேரத்தில் S18e 50MP ப்ரைம் கேமரா மற்றும் 2MP செகண்டரி கேமராவைக் கொண்டுள்ளது. S18 மற்றும் Pro வேரியன்ட்களில் சிறந்த 50MP முன் கேமராவுடன் பொருத்தப்பட்டுள்ளன, அதே நேரத்தில் S18e 16MP கேமராவைக் கொண்டுள்ளது.

அனைத்து மாடல்களும் 80W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கைப் வழங்குகிறது ஆனால் S18 மற்றும் ப்ரோ மாடல்கள் 5,000mAh பேட்டரியுடன் வந்தாலும், S18e 4800mAh பேட்டரியுடன் வருகிறது. அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் இன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் பொருத்தப்பட்டுள்ளது மற்றும் அனைத்து அடிப்படை கனெக்டிவிட்டி அம்சங்களையும் உள்ளடக்கியது.

இதையும் படிங்க Jio 28 நாட்கள் ரீச்சார்ஜ் உடன் முழு ஆண்டுக்கு Free Disney+ Hotstar சப்ச்க்ரிப்ஸன்

S18 மற்றும் 18 Pro இன் தடிமன் 7.45 mm ஆகும், அதே நேரத்தில் S18e யின் திக்னஸ் 7.69 mm ஆகும். எடையும் வேரியன்ட் S18 மற்றும் S18 Pro ஆகியவை ஆகும் 185.8 கிராம் மற்றும் 187.8 கிராம் எடையும், S18e 193 கிராம் எடையும் கொண்டது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :