Vivo S17 3C செர்டிபிகேஷன் பெறுகிறது, புதிய போன் 80W பிளாஷ் பாஸ்ட் சார்ஜிங்குடன் வரும்

Updated on 12-May-2023
HIGHLIGHTS

Vivo S17 சீன அறிமுகத்திற்கு முன்னதாக 3C செர்டிபிகேஷன் காணப்பட்டது

Vivo S17 80-வாட் பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் அறிமுகப்படுத்தப்படும்

முந்தைய தலைமுறை Vivo S16 ஆனது 66-W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்டுடன் வந்தது

Vivo S17 ஸ்மார்ட்போன் சீரிஸ் இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சீரிஸ்யில் Vivo S17, Vivo S17e மற்றும் Vivo S17 Pro மாடல்கள் இந்தியாவில் Vivo V29 series பெயரில் வெளியிடப்படலாம். அறிமுகத்திற்கு முன்னதாக, Vivo S17 3C செர்டிபிகேட் வெப்சைட்டில் தோன்றி, போனின் சார்ஜிங் விவரங்களை வெளிப்படுத்தியது.

Vivo S17 பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட்
Vivo S17 ஆனது 3C வெப்சைட்டில் V8037L0A0-CN, V8037L0B0-CN மற்றும் V8037L0D0-CN ஆகிய மாடல் நம்பர்கள் கொண்ட சார்ஜருடன் காணப்பட்டது. இந்த சார்ஜர்கள் 10W (5V/2A), 18W (9V/2A) மற்றும் 80W (11V/7.3A) என மதிப்பிடப்படுகின்றன. Vivo S17 க்கு 80W பாஸ்ட் சார்ஜிங் செட்டப் வழங்கப்படும் என்பதை இது காட்டுகிறது.

Vivo S17 ஸ்பெசிபிகேஷன்கள் (எதிர்பார்க்கப்படும்)
Vivo S17 ஆனது 120Hz ரிபெரேஸ் ரெட்டுடன் 1.5K OLED டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் Qualcomm Snapdragon 778G ப்ரோசிஸோர் பொருத்தப்படலாம். 8GB + 128GB, 8GB + 256GB மற்றும் 12GB + 256GB கான்பிகுரேஷன்களுடன் போன் வழங்கப்படலாம். டிவைஸ் சமீபத்திய Android 13 OS யில் வேலை செய்யும். Vivo S17 க்கு OIS சப்போர்டுடன் 50MP Sony IMX766V கேமரா கொடுக்கப்படலாம். இது தவிர, 80W பிளாஷ் சார்ஜ் பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் 4,500mAh பேட்டரி கொண்ட போனியில் காணலாம்.

Connect On :