பாப்அப் செல்பி கேமராவுடன் Vivo S1 அறிமுகமாகியுள்ளது..!
இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்பிளேயில் எந்த பன்ச் ஹோல் டிசைன் வழங்கவில்லை ஆனால் இந்த சாதனத்தில் பாப்-அப் செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
விவோ சீனாவில் அதன் புதிய மிட் ரேன்ஜ் சாதனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. Vivo V15 Pro இந்தியாவில் அறிமுகம் சேயோத பிறகு நிறுவனம் இதில் அதே மாதிரியான சாதனம் Vivo S1 சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்பிளேயில் எந்த பன்ச் ஹோல் டிசைன் வழங்கவில்லை ஆனால் இந்த சாதனத்தில் பாப்-அப் செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
Vivo S1 யில் 6.53-இன்ச் HD+ டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது, அதன் எஸ்பெக்ட் ரேஷியோ 19.5:9 இருக்கிறது. இதனுடன் இந்த போனில் மீடியாடேக் ஹீலியோ P70 SoC, 6GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது இதன் மென்பொருள் பற்றி பேசினால் இந்த சாதனம் ஆண்ட்ராய்டு அடிப்படையின் கீழ் OS 9 யில் வேலை செய்கிறது
கேமரா பற்றி பேசினால் இந்த ஸ்மார்ட்போனில் 12MP+8MP+5MP கேமரா வழங்கப்பட்டுள்ளது, இதனுடன் இந்த ஸ்மார்ட்போனில் 24.8MP யின் பாப்-அப் கேமரா வழங்கப்பட்டுள்ளது. Vivo S1 பின்புறத்தில் ஒரு பிங்கரப்ரின்ட் சென்சார் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 3940mAh யின் பேட்டரி உடன் 18W மூலம் பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் செய்கிறது.
Vivo S1நிறுவனம் Jovi AI வொய்ஸ் அசிஸ்டன்ட் கொண்டுள்ளது அதன் போனில் ஓரத்தில் கொடுக்கப்பட்டிருக்கும், பட்டன் மூலம் அதை பயன்படுத்தலாம். சாதனத்தில் கேமிங் பர்போமான்ஸ் அதிகரிக்க இதில் கேம் டர்போ வைக்கப்பட்டுள்ளது
Vivo S1 யின் விலை CNY 2,298 (Rs 23,525) வைக்கப்பட்டுள்ளது மற்றும் ஏப்ரல் 1 லிருந்து சீனாவில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனம் இந்தியாவில் எப்பொழுது அறிமுகமாகும் என்ற தேதி தகவல் கிடைக்கவில்லை.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile