விவோ நெக்ஸ் டூயல் ஸ்கிறீன் ஸ்மார்ட்போன் அறிமுகம்…!
விவோ நிறுவனம் தனது ஃபிளாக்ஷிப் நெக்ஸ் சீரிஸ்-இல் புது ஸ்மார்ட்போனினை டூயல் டிஸ்ப்ளேவுடன் அறிமுகம் செய்தது
விவோ நிறுவனம் தனது ஃபிளாக்ஷிப் நெக்ஸ் சீரிஸ்-இல் புது ஸ்மார்ட்போனினை டூயல் டிஸ்ப்ளேவுடன் அறிமுகம் செய்தது. புது நெக்ஸ் ஸ்மார்ட்போனில் 6.39 இன்ச் ஃபுல் HD பிளஸ் சூப்பர் AMOLED ஸ்கிரீன் மற்றும் பின்புறம் 5.49 இன்ச் FHD ரெசல்யூஷன் கொண்ட செகண்டரி டிஸ்ப்ளே கொண்டுள்ளது.
புது நெக்ஸ் ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர், 10 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9.0 பை சார்ந்த ஃபன்டச் OS . 4.5 இயங்குதளம் கொண்டு இயங்குகிறது. இத்துடன் போட்டோக்களை எடுக்க 12 MP பிரைமரி கேமரா, சோனி IMX363 சென்சார், 4-ஆக்சிஸ் OIS, 2 எம்.பி. நைட்விஷன் கேமரா, 2.9μm பிக்சல், 3D சென்சிங் வசதியுடன் வழங்கப்படுகிறது.
விவோ நெக்ஸ் டூயல் ஸ்கிரீன் சிறப்பம்சங்கள்:
– 6.39 இன்ச் 2340×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED 19:5:9 டிஸ்ப்ளே
– 5.49 இன்ச் 1920×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
– 2.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 845 64-பிட் 10 என்.எம். பிராசஸர்
– அட்ரினோ 630 GPU
– 10 ஜி.பி. ரேம்
– 128 ஜி.பி. மெமரி
– டூயல் சிம் ஸ்லாட்
– ஃபன்டச் ஓ.எஸ். 4.35 சார்ந்த ஆண்ட்ராய்டு 9.0 பை
– 12 எம்.பி. டூயல் பி.டி. பிரைமரி கேமரா, டூயல்-டோன் எல்.இ.டி. ஃபிளாஷ், சோனி IMX363 சென்சார், f/1.79
– 2 எம்.பி. நைட்விஷன் கேமரா, f/1.8, 2.9μm பிக்சல், 3D TOF கேமரா, f/1.3
– இன்-டிஸ்ப்ளே பிங்கர்ப்ரின்ட் சென்சார்
– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், AK-4377A ஆம்ப்ளிஃபையர்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
– 3500 Mah . பேட்டரி
– 22.5 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
புதிய நெக்ஸ் ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த பிங்கர்ப்ரின்ட் சென்சார் முந்தைய நெக்ஸ் ஸ்மார்ட்போனில் இருப்பதை விட 0.29 நொடிகளில் ஸ்மார்ட்போனை அன்லாக் செய்யும் என விவோ தெரிவித்துள்ளது. இத்துடன் 3500 Mah . பேட்டரி, 22.5 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.
விவோ நெக்ஸ் டூயல் ஸ்கிரீன் போன் ஐஸ் புளு, ஸ்டார் பர்ப்பிள் உள்ளிட்ட நிறங்களில் கிரேடியன்ட் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை 4998 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.52,080) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சீனாவில் விவோ நெக்ஸ் டூயல் ஸ்கிரீன் ஸ்மார்ட்போன் டிசம்பர் 29ம் தேதி முதல் விற்பனை செய்யப்பட இருக்கிறது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile