Vivo Y83 ஸ்மார்ட்போனில் 6.2இன்ச் HD+டிஸ்பிளே மற்றும் லேட்டஸ்ட் OS உடன் அறிமுகமானது

Updated on 01-Jun-2018
HIGHLIGHTS

Vivo அதிகாரபூர்வமாக இந்தியாவில் அதன் Vivo Y83 ஸ்மார்ட்போனை அறிமுகம்ப்படுத்தியுள்ளது

விவோ நிறுவனத்தின் Y83 ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியானது. முன்னதாக சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட Y83 ஸ்மார்ட்போன் இந்தியாவில் பட்ஜெட் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

விவோ Y83 ஸ்மார்ட்போனில் 6.22 இன்ச் HD + ஸ்கிரீன், 19:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 2.15மில்லிமீட்டர் மெல்லிய பெசல்கள், 88% ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ கொண்டுள்ளது. இத்துடன் மீடியாடெக் ஹீலியோ P22 ஆக்டா-கோர் சிப்செட், 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், 8 எம்பி செல்ஃபி கேமரா மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சார்ந்த அம்சங்கள் மற்றும் ஃபேஸ் அன்லாக் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் மற்றும் ஃபன்டச் ஓஎஸ் 4 மூலம் இயங்கும் விவோ வை83 ஸ்மார்ட்போன் கிளாஸ் மிரர் பேக் கொண்டுள்ளது. இதனால் குறிப்பிட்ட கோணங்களில் ஸ்மார்ட்போனின் பின்புறம் வெளிச்சம் படும்போது நிறம் மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவோ Y83  சிறப்பம்சங்கள்:

– 6.22 இன்ச் 1520×720 பிக்சல் ஹெச்டி+ 19:9 ஐபிஎஸ் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
– 2.0 ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் ஹீலியோ P22 பிராசஸர்
– IMG PowerVR GE8320 GPU
– 4 ஜிபி ரேம்
– 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– டூயல் சிம் ஸ்லாட்
– ஃபன்டச் ஓஎஸ் 4.0 சார்ந்த ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
– 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.2
– 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2
– பிங்கர்ப்ரின்ட் சென்சார்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 3260 mah பேட்டரி

இந்தியாவில் விவோ வை83 ஸ்மார்ட்போன் கருப்பு நிறத்தில் கிடைக்கிறது. ஆஃப்லைன் முறையில் விற்பனை செய்யப்படும் விவோ வை83 விலை ரூ.14,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :