விவோ நிறுவனத்தின் வி20 எஸ்இ ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 6.44 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் AMOLED ஹாலோ டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர், 8 ஜிபி ரேம், 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு சென்சார், 2 எம்பி டெப்த் சென்சார் மற்றும் 32 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது.
Vivo V20 SE சிறப்பம்சங்கள்
– 6.44 இன்ச் 2400×1080 பிக்சல் FHD+ AMOLED டிஸ்ப்ளே
– ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 665 11nm பிராசஸர்
– அட்ரினோ 610 GPU
– 8 ஜிபி ரேம்
– 128 ஜிபி மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 10 மற்றும் பன்டச் ஒஎஸ் 11
– டூயல் சிம்
– 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.8, எல்இடி பிளாஷ்
– 8 எம்பி 120° வைடு ஆங்கில் கேமரா, f/2.2
– 2 எம்பி டெப்த் கேமரா, f/2.4
– 32 எம்பி செல்பி கேமரா, f/2.0
– இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
– 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
– யுஎஸ்பி டைப் சி
– 4100 எம்ஏஹெச் பேட்டரி
– 33 வாட் பாஸ்ட் சார்ஜிங்
இத்துடன் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 4100 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வழங்கப்பட்டு இருக்கிறது. இது ஸ்மார்ட்போனை 0 முதல் 62 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 30 நிமிடங்களை எடுத்துக் கொள்கிறது.
Vivo V20 SE ஸ்மார்ட்போன் கிராவிட்டி பிளாக் மற்றும் அக்வாமரைன் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 20,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.