Vivo இந்தியாவில் அதன் Vivo Y56 5Gபோனின் புதிய ஸ்டோரேஜ் வேரியன்ட் அறிமுகம், இந்த ஆண்டின் தொடக்கத்தில், நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனின் 8GB + 128GB வேரியண்டை அறிமுகப்படுத்தியது. இப்போது இந்த சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர் Y56 யின் 4GB + 128GB எடிசன் நாட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் MediaTek சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது மற்றும் 50MP ப்ரைம் கேமராவை வழங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் இரண்டு கலர் விருப்பங்களில் வருகிறது மற்றும் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தில் செயல்படுகிறது.
Vivo Y56 இன் 4GB + 128GB வேரியண்டின் விலை ரூ.16,999. இந்த ஸ்மார்ட்போன் ஆரஞ்சு ஷிம்மர் மற்றும் பிளாக் இன்ஜின் கலர் விருப்பங்களில் கிடைக்கும். மறுபுறம், இந்த ஸ்மார்ட்போனின் 8ஜிபி பதிப்பின் விலை ரூ.18,999.ஆகும்
Vivo Y56 5G போனின் டிஸ்ப்ளே பற்றி பேசுகையில் இதில் 6.5இன்ச் FHD+டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது, இது 1080 x 2408 பிக்சல் ரேசளுசன் மற்றும் 60Hz ரெப்ராஸ் ரேட் கொண்டுள்ளது.
விவோவின் இந்த ஸ்மார்ட்போன் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 700 சிப்செட்டில் இயங்குகிறது, Android 13 அடிப்படையிலான Funtouch OS இயங்கும்
இது 8ஜிபி வரை ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இதில் மைக்ரோ SD கார்டு மூலம் மேலும் அதிகரிக்ககூடிய 128ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் கிடைக்கும். 8ஜிபி ஃபிசிக்கல் ரேம் உடன், போனில் கூடுதலாக 8ஜிபி விர்ச்சுவல் ரேமையும் இது சப்போர்ட் செய்கிறது
இந்த டூயல் சிம் ஸ்மார்ட்போனில் இரட்டை பின்புற கேமரா அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது, இதில் f/1.8 அப்ரட்ஜர் கொண்ட 50MP ப்ரைம்சென்சார் மற்றும் f/2.4 அப்ரட்ஜர் கொண்ட 2MP இரண்டாம் நிலை கேமரா ஆகியவை அடங்கும். இது தவிர, செல்ஃபிகள் மற்றும் வீடியோ காலிற்காக ஃபோனில் 16MP முன் பெசிங் கேமரா f/2.0 அப்ரட்ஜர் கொண்டது.
இந்த போனில் , இது 5000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, இது 18W சார்ஜிங் சப்போர்டையும் வழங்குகிறது.
டிஜிட் தமிழில் அன்றாட டெக்னாலஜி யில் நியூஸ்,மொபைல்,கேட்ஜெட் , டெலிகாம் ,கம்பேரிசன் ,டிப்ஸ் & ட்ரிக்ஸ் என பல புதிய தகவல்களை துல்லியமாக வழங்குவோம். எங்கள் WhatsApp சேனலுக்கு உங்களின் சப்போர்ட் தேவை எனவே எங்களை போலோ செய்யுங்கள்.