விவோவின் iQOO பிராண்டு ஏற்கனவே அறிவித்தப்படி தனது முதல் கேமிங் ஸ்மார்ட்போனினை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய கேமிங் ஸ்மார்ட்போனில் 6.41 இன்ச் ஃபுல் HD பிளஸ் வாட்டர் டிராப் நாட்ச், ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், லிக்விட் கூலிங், 12 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு பை இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.
போட்டோக்கள் எடுக்க 12 எம்.பி. பிரைமரி கேமரா சோனி IMX363 சென்சார், 13 எம்.பி. 120 டிகிரி அல்ட்ரா வைடு-ஆங்கிள் லென்ஸ், 2 எம்.பி. சென்சார் மற்றும் 13 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டிருக்கிறது. ஐகூ கேமிங் ஸ்மார்ட்போன் இன்-டிஸ்ப்ளே பிங்கர்ப்ரின்ட் சென்சார் மற்றும் அலுமினியம் அலாய் ஃபிரேம் கொண்டிருக்கிறது.
விவோ iQOO சிறப்பம்சங்கள்:
– 6.41 இன்ச் 1080×2340 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED 19.5:9 டிஸ்ப்ளே
– ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 855 7 என்.எம். பிராசஸர்
– அட்ரினோ 640 GPU
– 6 ஜி.பி. ரேம்
– 8 ஜி.பி. ரேம் / 128 ஜி.பி. / 256 ஜி.பி. மெமரி
– டூயல் சிம்
– ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் ஃபன்டச் ஓ.எஸ். 9
– 12 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், சோனி IMX363, f/1.79
– 13 எம்.பி. 120-டிகிரி அல்ட்ரா வைடு-ஆங்கிள் லென்ஸ், f/2.4
– 2 எம்.பி. கேமரா, f/2.4
– 12 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
– இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
– 4000 Mah . பேட்டரி
– 44 வாட் அல்ட்ரா ஃபாஸ்ட் சார்ஜிங்
இதன் பேக் கவரில் இரண்டு எலெக்ட்ரோ-ஆப்டிக் லைன்கள் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 4D கேமிங் அனுபவத்தை வழங்க இரு பிரெஷர் சென்சிட்டிவ் பட்டன்கள் வழங்கப்பட்டிருக்கிறது.
விலை மற்றும் விற்பனை
விவோ ஐகூ ஸ்மார்ட்போன் எலெக்ட்ரோ புளு மற்றும் லாவா ஆரஞ்சு என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இதுதவிர பேஸ் மாடல் ஒன்று அல்ட்ரா-ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் கிடைக்கிறது. பேஸ் வேரியண்ட் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி விலை 2998 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.31,740) என்றும் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி விலை 3298 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.34,910) என்றும் 9 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. ரேம் விலை 3598 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.38,090) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேட் பிளாக் கார்பன் ஃபைபர் டெக்ச்சர் பேக் கவர் கொண்ட டாப் எண்ட் 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் 4298 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.45,500) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.