Vivo Apex முழு ஸ்கிறீன் கொண்ட ஸ்லைடிங் செல்பி கேமரா உடன் ஜூன் 12 அன்று அறிமுகமாகும்
Vivo Apex சாதனத்தின் கருத்து பற்றி முதல் முறையாக MWC 2018 யில் அறிமுகம் செய்யப்பட்டது
விவோ நிறுவனத்தின் Vivo Apex ஸ்மார்ட்போன் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் மற்றும் முற்றிலும் பெசல்-லெஸ் டிஸ்ப்ளே கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போனாக இது அமைந்தது.
அறிமுக நிகழ்வில் அபெக்ஸ் ஸ்மார்ட்போன் கான்செப்ட் நிலையில் இருப்பதாகவும், இதன் தயாரிப்பு பணிகள் இந்த ஆண்டிலேயே துவங்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், விவோ அபெக்ஸ் ஸ்மார்ட்போன் ஜூன் 12-ம் தேதி ஷாங்காய் நகரில் நடைபெற இருக்கும் விழாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்துடன் புதிய ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களும் சீனாவில் வெளியிடப்பட்டு இருக்கிறது.
அதன்படி கேமரா, ஸ்பீக்கர் மற்றும் சென்சர் அம்சங்களை வழங்குவதால் ஏற்படும் இட பிரச்சனையை கடந்தும் ஃபுல் வியூ தொழில்நுட்பத்தை ஏற்கனவே பயன்படுத்தி வருவதாக விவோ அறிவித்துள்ளது. மேலும் இது உலகின் முதல் பாதி-ஸ்கிரீன் கைரேகை சென்சார் தொழில்நுட்பம் என்பதோடு உலகில் அதிகளவு இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் தொழில்நுட்பம் தயாரிக்கப்படுவதும் இதுவே முதல் முறை ஆகும்.
விவோ நிறுவனத்தின் X20 பிளஸ் UD ஸ்மார்ட்போனில் அந்நிறுவனம் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் தொழில்நுட்பம் வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. விவோ X20 பிளஸ் UD ஸ்மார்ட்போனில் மிகவும் மெல்லிய பெசல்கள் வழங்கப்பட்டு இருந்த நிலையில், புதிய ஸ்மார்ட்போனில் அதிகபட்சம் 98% அளவு மெல்லிய பெசல்கள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் சவுன்கேஸ்டிங் தொழில்நுட்பம் ஃபுல்வியூ டிஸ்ப்ளேவை ஸ்பீக்கராக மாற்றுகிறது. இது வழக்கமான லவுட்ஸ்பீக்கருக்கான தேவையின்றி டிஸ்ப்ளேவில் அதிர்வலைகளை அனுப்பும். இதனால் மின்திறன் சேமிக்கப்பட்டு, சவுன்ட் லீக்கேஜ் தடுக்கப்படுகிறது. மேலும் ஆடியோவை சீராக வெளியிடவும் இந்த தொழில்நுட்பம் வழிவகை செய்யும்.
செல்ஃபிக்களை எடுக்க புதிய விவோ ஸ்மார்ட்போனில் 8 எம்பி எலிவேட்டிங் கேமரா வழங்கப்படுகிறது. இந்த கேமரா 0.8 நொடிகளில் வெளியேவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile