வெர்டு நிறுவனம் மெட்டாவெர்டு பெயரில் புதிய தலைமுறை ஸ்மார்ட்போனை லண்டனில் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் வெப்3 சாதனம் ஆகும். இதில் அதிகபட்சம் 18 ஜிபி மெமரி, 10TB வரை ஸ்டோரேஜ் வழங்கப்பட்டு இருக்கிறது. அனைவருக்கும் சமமான டேட்டா உரிமை சூழலை உருவாக்க நினைப்பதாக வெர்டு தெரிவித்துள்ளது.
மெட்டாவெர்டு மாடலில் 144Hz அல்ட்ரா-ஹை-பிரஷ் AMOLED பேனல், குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் அதிகபட்சம் 18 ஜிபி ரேம், 1TB மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது. வெப்3 மொபைல் போனாக பயன்படுத்தும் போது 10TB வரை ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது.
புதிய வெர்டு ஸ்மார்ட்போனில் IMX787 35mm பிரைமரி கேமரா, ஆப்டிக்கல் டெலிபோட்டோ லென்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 4600 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. பாஸ்ட் சார்ஜிங் மூலம் இந்த ஸ்மார்ட்போனை 20 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்திட முடியும். இதில் பில்ட்-இன் A5 செக்யுரிட்டி சிப், SE+ TEE தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது.
மெட்டாவெர்டு மாடலில் வெப்2.0-இல் இருந்து வெப்3.0-க்கு எளிதில் மாற ஒற்றை பட்டன் வழங்கப்பட்டுள்ளது. வெப்3.0 மோடில் மெட்டாவெர்டு மாடல் காப்புரிமை பெற்ற கேமரா கொண்டிருக்கிறது. இந்த போனில் ஓட்டல் முன்பதிவு, பரிசு பொருள் வாங்குவது மற்றும் ஏராளமான விஐபி சேவைகள் வழங்கப்பட்டுள்ளன.