Upcoming Smartphones :ஜனவரி மாதத்தில் நாம் பல ஸ்மார்ட்போன் அறிமுகமானதை அறிவோம், இதில் Samsung Galaxy S24 series, OnePlus 12 series, Poco X6 series மற்றும் பல போன்கள் அடங்கியுள்ளது.அதே போல் பிப்ரவரியான இந்த மாதமும் பல புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது ஏன் என்றால் இந்த மாதம் MWC 2024 நடைபெற இருக்கிறது MWC (மொபைல் வால்ட் காங்கிரஸ் )உலகின் மிக பெரிய டேக் நிகழ்வு ஆகும். இது பார்சிலோனாவில் பிப்ரவரி 26 முதல் பிப்ரவரி 29 வரை நடைபெற உள்ளது. எனவே நேரத்தை வீணாக்காமல், இந்த மாதம் அறிமுகப்படுத்தப்படும் இந்த 5 வரவிருக்கும் ஸ்மார்ட்போன்களைப் பார்ப்போம்.
iQOO Neo 9 Pro ஸ்மார்ட்போனில் ஸ்னாப்ட்ரகன் 8ஜென் 2 ப்ரோசெசர் கொண்டுள்ளது, இதை தவிர இதில் 12GB ரேம் மற்றும் 256GB வரையிலான ஸ்டோரேஜ் உடன் வழங்கப்படுகிறது, இதன் பின்புறத்தில் ஒரு டூயல் கேமரா செட்டப் வழங்கப்படுகிறது, அது 50MP மெயின் கேமரா மற்றும் 8MP அல்ட்ரா வைட் லென்ஸ் அடங்கியுள்ளது, இந்த ஸ்மார்ட்போன் பிப்ரவரி 22அறிமுகமாகும் இதன் ப்ரீ ஆர்டர் பிப்ரவரி 8 லிருந்து ஆரமபங்கும்.
இந்திய சந்தையில் Honor திரும்பிய பிறகு Honor X9b நிறுவனத்தின் இரண்டாவது ஸ்மார்ட்போன் ஆகும், இந்த ஸ்மார்ட்போன் உலகளவில் கிடைக்கிறது, எனவே எங்களிடம் ஏற்கனவே அதன் சிறப்பம்சங்கள் இருக்கும் அதாவது இந்த போனில் . 6.78 இன்ச் 120Hz AMOLED டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. இது தவிர, இது Snapdragon 6 Gen 1 ப்ரோசெசருடன் பொருத்தப்பட்டுள்ளது, இது 12GB ரேம் மற்றும் 256GB சேமிப்பகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. போட்டோ எடுப்பதற்கு , இது 108MP பிரைமரி கேமரா, 5MP அல்ட்ராவைடு லென்ஸ் மற்றும் 2MP மேக்ரோ சென்சார் ஆகியவற்றைப் பயன்படுத்துகிறது. இந்த போன் இந்தியாவில் பிப்ரவரி 15 ஆம் தேதி வெளியிட தயாராக உள்ளது.
Xiaomi யின் இந்த ஸ்மார்ட்போன் Xiaomi 14 Series யின் ஒரு எடிசனாக இருக்கும், இது கடந்த ஆண்டு சீனாவில் அறிமுகம் செய்தது. இந்த போனின் தகவல் ஏதும் வரவில்லை இருப்பினும் Xiaomi india சமீபத்தில் Leica உடன் பார்ட்னர்ஷிப் கொள்வதாக டீசர் போஸ்ட் வெளியாகியது.ஆன்லைன் லீக்களின் படி, இந்த ஸ்மார்ட்போன் குவாட் கேமரா செட்டிங்குடன் வரலாம். இதில் 50MP ப்ரைம் கேமரா, 120mm பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ சென்சார் மற்றும் இரண்டு சென்சார்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது முற்றிலும் முதன்மை போனாக இருக்கும். அறிமுகம் பற்றி பேசுகையில், இது MWC பார்சிலோனாவின் போது உலகளவில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Nothing Phone (2a)போனை பற்றி பற்றி பேசினால் இதில் 6.7 இன்ச் கொண்ட 120Hz FHD AMOLED டிஸ்பிளே வழங்கப்படுகிறது, இதை தவிர இந்த போனில் MediaTek Dimensity 7200 ப்ரோசெசரனது 12GB ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்படலாம். இது ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான நத்திங் ஓஎஸ் 2.5 யில் இயங்கும். இது தவிர, ஸ்மார்ட்போனை 4900mAh பேட்டரியை வழங்கலாம் என கூறப்படுகிறது . நிறுவனம் சமீன்பத்தில் இந்த போனை டீஸ் செய்ய ஆதொடங்கியது, அனால் இந்த போனின் அறிமுக தகவலை பற்றி எதையும் வெளியிடவில்லை,, இருப்பினும் இந்த போனும் MWC Barcelona அறிமுகமாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் வந்த தகவலின் படி இந்த ஸ்மார்ட்போன் வரவிருக்கும் Oppo Reno 11F யின் ரீபிராண்டெட் வீரசனாகும் என்று வதந்திகள் உள்ளன. Reno 11F முதலில் மலேசியாவில் அறிமுகப்படுத்தப்படலாம், பின்னர் Oppo F25 5G ஆக இந்தியாவிற்கு வரலாம். X இல் raihanhan121 என்ற பயனர் Oppo Reno 11F யின் சிறப்பம்சங்கள் பற்றிய தகவலை அளித்துள்ளார்.
இந்த ஸ்மார்ட்போன் 6.7 இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளேவுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது 120Hz ரெஃப்ரஷ் ரெட் சப்போர்ட் செய்யும் . இது தவிர, இது MediaTek Dimension 7050 சிப்செட்டுடன் வரும் என்று கூறப்படுகிறது, இது 8GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ் சப்போர்ட் செய்கிறது. போட்டோ எடுப்பதற்கு, இது 64MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ராவைடு லென்ஸ் மற்றும் 2MP மேக்ரோ லென்ஸுடன் வழங்கப்படலாம். இது 67-வாட் வேகமான சார்ஜிங்கை சப்போர்ட் செய்யக்கூடிய 5000mAh பேட்டரியுடன் நிரம்பியிருக்கலாம்.
இதையும் படிங்க: Samsung யின் இந்த ஸ்மார்ட்போனில் அதிரடியாக 3000ரூபாய் விலை குறைப்பு
அதன் வெளியீடு பற்றி பேசுகையில், Oppo அதன் வெளியீட்டு தேதியை இன்னும் அறிவிக்கவில்லை. இருப்பினும், இது பிப்ரவரி இறுதியில் இந்தியாவிற்கு வரும் என்று டிப்ஸ்டர்கள் கூறுகின்றனர்.