Upcoming smartphones: ஜனவரியில் அறிமுகமாக இருக்கும் அசத்தலான ஸ்மார்ட்போன்

Updated on 18-Dec-2023

நீங்கள் ஒரு புதிய  Upcoming smartphone ஸ்மார்ட்போன் வாங்க நினைத்தால், நீங்கள் சிறிது நேரம் காத்திருக்க வேண்டும் , ஏனெனில் புதிய ஆண்டில் அதாவது ஜனவரி 2024 யில் இந்தியாவில் பல ஸ்மார்ட்போன்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இதில் OnePlus, Xiaomi, Samsung மற்றும் Vivo பிராண்டுகளின் ஸ்மார்ட்போன்கள் அடங்கும். 100W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் கூடிய பவர்புல்லான கேமரா அமைப்பு போனில் வழங்கப்பட்டுள்ளது. இந்த லிஸ்டில் என்ன என்ன ஸ்மார்ட்போன்கள் இருக்கிறது என்று பார்க்கலாம்.

January 2024 Upcoming smartphones

OnePlus 12​ யின் அறிமுக தேதி 23 ஜனவரி 2024

OnePlus 12 யில் 6.82 AMOLED டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது, இந்த போனில் Snapdragon 8 Gen 3 ஆதரவுடன் வரும். மேலும், சார்ஜ் செய்வதற்கு 100W ஃபாஸ்ட் வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு வழங்கப்படும். உங்களுக்கு போனில் 5400mAh பேட்டரி வழங்கப்படும். தொலைபேசி 64MP டெலிஃபோட்டோ லென்ஸ் சப்போர்டுடன் 50MP வைட் ஆங்கிள் மற்றும் 48MP அல்ட்ராவைடு உடன் வரும்.

Samsung Galaxy S24 சீரிஸ் அறிமுக தேதி 24 ஜனவரி 2024​

இந்த போனில் குவல்கம் ஸ்னப்ட்ராக்ன் 8 ஜென் 3 சிப்செட்டுடன் வருகிறது, சாம்சங்கின் இந்த போனில் புதிய கேலக்சி AI ஸ்மார்ட் அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது

Upcoming smartphone Samsung Galaxy S24

Xiaomi Redmi Note 13 சீரிஸ் அறிமுக தேதி 4 ஜனவரி 2024​

Redmi நோட் 13, ரெட்மி நோட் 13 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் ஆகிய மூன்று ஸ்மார்ட்போன்களை ரெட்மி நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது. ஃபோனில் 6.67 இன்ச் 1.5K OLED டிஸ்ப்ளே இருக்கும், இது 120Hz ரெப்ராஸ் ரேட் சப்போர்டுடன் வரும். இதில் MediaTek Dimensity 7200 ப்ரோசெசர் சப்போர்ட் செய்யப்படும் இதில் பவர் பேக்கப்பிற்காக, ஃபோனில் 5000mAh பேட்டரி வழங்கப்படும். ஃபோன் 120W பாஸ்ட் வயர்டு சார்ஜிங் சப்போர்டுடன் வரும்.

Upcoming smartphone Redmi Note 13 Series in India

​Vivo X100 Pro மற்றும் X100​ அறிமுக தேதி 2024 ஜனவரி யில் அறிமுகமாகும்

புதிய MediaTek Dimensity 9300 ப்ரோசெசர் போனில் சப்போர்ட் செய்யப்படும் இது 50MP 1-இன்ச் IMX989 VCS பயோனிக் சென்சார் கொண்டிருக்கும். மேலும், 150 டிகிரி போல்ட் ஆஃப் வியுவ் 50MP அல்ட்ராவைடு கேமரா மற்றும் 50MP பெரிஸ்கோபிக் லென்ஸ் வழங்கப்படும். இது 100x டிஜிட்டல் ஜூம் மூலம் வழங்கப்படும். மேலும், 3x ஆப்டிகல் ஜூம் சப்போர்ட் செய்யலாம்.

இதையும் படிங்க : WhatsApp யில் வருகிறது புதிய ஆட்டோமேட்டிக் album அம்சம், இதனால் என்ன பயன் பாருங்க

OnePlus 12R, 23 ஜனவரி 2024​

OnePlus R சீரிஸ் இந்தியாவில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்படுகிறது. இது இந்தியாவுக்கே உரிய ஃபோனாக இருக்கும் என்று கூறப்படுகிறது. போனின் டிசைன் மற்றும் சிறப்பம்சங்கள் லீக் ஆகியுள்ளது.

OnePlus 12R leak suggest big upgrades
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :