Nokia C32 VS Nokia C22: 9000ரூபாய் இருக்கும் பட்ஜெட் ரேஞ்சில் வரும் இந்த போனில் எது பெஸ்ட்?

Updated on 16-Aug-2023
HIGHLIGHTS

நோக்கியாவின் இந்திய ரசிகர்களுக்கு மே மாதம் ஒரு சிறந்த மாதம். இந்த பிராண்ட் இந்திய சந்தையில் இரண்டு குறைந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது,

நோக்கியா C32 மற்றும் நோக்கியா C22 பெயர்களில் என்ட்ரி கொடுத்தது

நோக்கியா சி 22 மற்றும் சி 33 யின் இந்த இரண்டு போன்களில் எது பெஸ்ட் என்று பாப்போம்.

நோக்கியாவின் இந்திய ரசிகர்களுக்கு மே மாதம் ஒரு சிறந்த மாதம். இந்த பிராண்ட் இந்திய சந்தையில் இரண்டு குறைந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது, அவை நோக்கியா C32 மற்றும் நோக்கியா C22 பெயர்களில் என்ட்ரி கொடுத்தது. C22 விலை ரூ.7,999 மற்றும் C32 விலை ரூ.8,999 முதல் தொடங்குகிறது. ஆயிரம் ரூபாய் வித்தியாசத்தில் எந்த மொபைல் போன் பயனளிக்கும் என்பதை நிரூபிக்கும் பதில் இங்கே உள்ளது. அடுத்து, நோக்கியா சி 22 மற்றும் சி 33 யின் இந்த இரண்டு போன்களில் எது பெஸ்ட் என்று பாப்போம்.

Nokia C22 VS Nokia C32 சிறப்பம்சம்

டிசைன்

Nokia C22 பாலிகார்பனேட் யூனிபாடி டிசைன் கட்டமைக்கப்பட்டுள்ள நிலையில், Nokia C32 மெட்டல் சேஸால் கிளாஸ் பயன்படுத்துகிறது.

இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் IP52 சர்டிபிகேட் பெற்றவை. சாதனத்தில் தண்ணீர் விழுந்தாலோ, போன் டஸ்ட் இருந்தாலோ எந்த பாதிப்பும் ஏற்படாது, மொபைல் பாதுகாப்பாக இருக்கும்.

டிசைனை பொறுத்தவரை, நோக்கியா C32 ஸ்மார்ட்போன் C22 ஐ விட சற்று முன்னால் செல்கிறது. அதன் தோற்றம் அதிக பிரீமியமாக இருக்கிறது.

டிஸ்பிளே

Nokia C22 மற்றும் C32 இரண்டும் 20: 9 ரேஷியோ கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றின் ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ ஒரே மாதிரியாக உள்ளது மற்றும் 'U' வடிவ நாட்ச் ஸ்க்ரீன் மேல் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு ஸ்மார்ட்போனிலும்  பிக்சல் ரெஸலுசன் 6.5 இன்ச் டிஸ்பிளே சப்போர்ட் செய்கிறது, அது HD+ குவாலிட்டி கொண்டுள்ளது.

Nokia C22 ஸ்க்ரீனில் சாதாரண க்ளாஸ் லேயர் பொருத்தப்பட்டிருந்தாலும், Nokia C32 யில் 2.5D க்ளாஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஒப்பீடு:Nokia C22 மற்றும் C32  யின் ஸ்க்ரீன் ஒரே மாதிரியாக உள்ளது, மேலும் நீங்கள் இங்கு எந்த பெரிய வித்தியாசத்தையும் காண மாட்டீர்கள். ஆம், Nokia C32 கீறல்கள் போன்றவற்றுக்கு வரும்போது இன்னும் கொஞ்சம் தாங்கும்.

ப்ரோசெசர்

ப்ரோசெசர் பற்றி பேசுகையில் :Nokia C22 மற்றும் சி32 ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களும் ஒரே மாதிரியானவை. இது Unisoc SC9863A ஆக்டா-கோர் ப்ரோசெசர் மூலம் இயக்கப்படுகிறது, இது 1.6GHz க்ளோக் வேகத்தில் இயங்குகிறது.

Nokia C32 யின் இந்த போன் ஆண்ட்ராய்டு 13 OS யில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது  ஆண்ட்ராய்டு 13 'கோ' எடிசன் நோக்கியா சி22 யில் கிடைக்கிறது. இரண்டு நோக்கியா ஃபோன்களும் தூய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் வேலை செய்கின்றன, அவற்றில் கூடுதல் UI லேயர் எதுவும் கொடுக்கப்படவில்லை.

நோக்கியாவின் இந்த இரண்டு போனிலும் memory extension சப்போர்ட் செய்கிறது, இவற்றில், 2 ஜிபி விர்ச்சுவல் ரேம் கிடைக்கிறது, இது போனின் இன்டெர்னல் ரேம் மெமரியுடன் சேர்ந்து, அதை அதிகரிக்கப்பட்டுள்ளது..

ஒப்பீடு: இரண்டு நோக்கியா போன்களின் ப்ரோசெசர் ஒரே மாதிரியாக இருந்தாலும், ஆண்ட்ராய்டு 'கோ' எடிசன் இருப்பதால், நோக்கியா சி22 பயனர்கள் கூடுதல் நன்மைகளைப் பெறுவார்கள். இதில் கூகுள் கோ ஆப்களை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளலாம். இந்த ஆப்ஸ் குறைந்த ரேமில் கூட மென்மையான செயலியை செய்கிறது மற்றும் தொலைபேசியில் பேட்டரி மற்றும் இன்டர்நெட் நுகர்வு ஆகியவற்றைக் குறைக்கிறது.

கேமரா

Nokia C22 யின் பேக் பேனலில் டுயல் பின் கேமரா செட்டப் கொடுக்கப்பட்டுள்ளது, இதில் 13 மெகாபிக்சல் பிரைமரி சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் உள்ளது.

Nokia C32  யில் இரட்டை பின்புற கேமரா செட்டிங் LED ஃபிளாஷ் கொண்ட 50 மெகாபிக்சல் பிரைமரி சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் ஆகியவை அடங்கும்.

இந்த ஸ்மார்ட்போனில் செல்ஃபி மற்றும் வீடியோ காலிங்க்கு  இந்த இரண்டு போனிலும் 8 மெகாபிக்ஸல் முன் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

ஒப்பீடு:: நோக்கியா C32 ஸ்மார்ட்போன் கேமரா பிரிவில் C22ஐ விட மிகவும் முன்னே உள்ளதை நீங்கள் தெளிவாகக் காணலாம். செல்ஃபி விஷயத்தில் இரண்டும் ஒன்றுதான்.

பேட்டரி

பவர் பேக்கப்பிற்காக நோக்கியா சி22 மற்றும் சி32 ஸ்மார்ட்போன்களில் 5,000 எம்ஏஎச் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு மொபைல் போனிலும் 10W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் செய்கிறது.

Nokia C32 VS Nokia C22: விலை தகவல்

நோக்கியா சி22 இரண்டு ரேம் வகைகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 2ஜிபி ரேம் + 64ஜிபி சேமிப்பு கொண்ட அடிப்படை மாடலின் விலை ரூ.7,999. இதேபோல், 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் கூடிய பெரிய வேரியண்ட் ரூ.8,499 க்கு கொண்டு வரப்பட்டுள்ளது.இந்த போனை கரி, மணல் மற்றும் ஊதா நிறங்களில் வாங்கலாம்.

Nokia C32 இரண்டு ஸ்டோரேஜ் வகைகளிலும் என்ட்ரி கொடுத்துள்ளது. இதன் அடிப்படை மாடல் 64 ஜிபி ஸ்டோரேஜுடன் 4 ஜிபி ரேம் கொண்டது, இதன் விலை ரூ.8,999. இதேபோல், C32 இன் பெரிய வேரியண்ட் 4 ஜிபி ரேம் உடன் 128 ஜிபி ஸ்டோரேஜை ஆதரிக்கிறது மற்றும் அதன் விலை ரூ.9,499 ஆகும். இந்த போனை பீச் பிங்க், கரி மற்றும் புதினா வண்ணங்களில் வாங்கலாம்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :