ரூபாய் 5௦௦க்கு 4G ஸ்மார்ட்போன்: விரைவில் வெளியீடு
ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியாக குறைந்த விலையில் 4ஜி வசதி கொண்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய டெலிகாம் சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ ஏற்படுத்திய விலை போட்டி தற்சமயம் முடிவதாய் இல்லை. முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் தங்களது விலை மற்றும் சலுகைகளை வாடிக்கையாளர்களை கவரும் வகையில் மாற்றியமைத்து வந்த நிலையில், தற்சமயம் அதிரடி திட்டத்தை வகுத்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து பிரபல ஆங்கில செய்தி நிறுவனம் வெளியிட்டு இருக்கும் தகவல்களில், நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் ரூபாய்.500 மற்றும் அதற்கும் குறைந்த விலையில் 4ஜி வசதி கொண்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரதி ஏர்டெல், வோடபோன் இந்தியா மற்றும் ஐடியா செல்லுலார் போன்ற நிறுவனங்கள் மொபைல் போன் தயாரிப்பாளர்களுடன் இணைந்து பீச்சர் போன்களை விட குறைந்த விலையில் ஸ்மார்ட்போன்களை தயாரிக்கும் பணிகளில் ஈடுப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. மேலும் புதிய ஸ்மார்ட்போன்களுடன் ரூ.60-70 விலையில் வாய்ஸ் கால் மற்றும் டேட்டா சேவை வழங்கும் மாதாந்திர திட்டமும் அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
இந்திய சந்தையில் ஸ்மார்ட் அம்சங்கள் நிறைந்த ஒற்றை ஃபீச்சர் போனாக ரிலையன்ஸ் ஜியோபோன் இருக்கிறது. அந்த வகையில் ஜியோவுக்கு போட்டியளிக்கும் வகையில் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய டெலிகாம் நிறுவனங்கள் திட்டமிட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன் வைத்திருப்போர் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களை வாங்க துவங்கி இருக்கும் நிலையில், என்ட்ரி-லெவல் ஸ்மார்ட்போன் வைத்திருப்போர் பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன்களை வாங்குகின்றனர். அந்தவகையில் பீச்சர் போன் வாடிக்கையாளர்கள் ஸ்மார்ட்போன்களை வாங்கினாலும், என்ட்ரி-லெவல் ஃபீச்சர் போன் மற்றும் என்ட்ரி-லெவல் ஸ்மார்ட்போன்களுக்கும் இடையே இடைவெளி ஏற்பட்டு இருப்பதாக கவுன்ட்டர்பாயின்ட் ஆய்வில் தெரிவிக்கப்பட்டது.
டெலிகாம் நிறுவனங்கள் மலிவு விலை ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும்பட்சத்தில் இந்த இடைவெளி வெகுவாக குறையும். மேலும் ஃபீச்சர்போன் வைத்திருப்போர் ஸ்மார்ட்போன்களை வாங்குவர், மேலும் டெலிகாம் நிறுவனங்களும் தங்களது வாடிக்கையாளர்களை தக்க வைத்து கொள்ள முடி
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile