Tecno Spark Go 1 போன் அறிமுகம் டாப் அம்சம் தெருஞ்சிகொங்க

Tecno Spark Go 1 போன் அறிமுகம் டாப் அம்சம் தெருஞ்சிகொங்க
HIGHLIGHTS

Tecno அதன் புதிய ஸ்மார்ட்போன் Tecno Spark Go 1 அதிகாரபூர்வமாக அறிமுகம் செய்தது

ஸ்பார்க் கோ 1 போனில் 6.67 இன்ச் ஐபிஎஸ் LCDடிஸ்ப்ளே உள்ளது

இந்த போனின் விலை மற்றும் சிறப்பம்சம் தகவல்களை பற்றி பார்க்கலாம் வாங்க.

டெக்னோ அதன் புதிய ஸ்மார்ட்போன் Tecno Spark Go 1 அதிகாரபூர்வமாக அறிமுகம் செய்தது டெக்னோவின் ஸ்பார்க் கோ 1 போனில் 6.67 இன்ச் ஐபிஎஸ் LCDடிஸ்ப்ளே உள்ளது. இது 120Hz ரெப்ராஸ் ரேட்டை சப்போர்ட் செய்கிறது மேலும் இந்த போனின் விலை மற்றும் சிறப்பம்சம் தகவல்களை பற்றி பார்க்கலாம் வாங்க.

Tecno Spark Go 1 டாப் சிறப்பம்சம்.

டிஸ்ப்ளே

டெக்னோ ஸ்பார்க் கோ 1 ஆனது 6.67 இன்ச் IPS LCD டிஸ்ப்ளே, சென்டரில் பஞ்ச்-ஹோல் கட்அவுட், அதாவது டைனமிக் போர்ட் அம்சத்துடன் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. சார்ஜிங் ஸ்டேட்டஸ் மற்றும் நோட்டிபிகேசன் டைனமிக் போர்ட் மூலம் சரிபார்க்கலாம். மென்மையான டிஸ்ப்லேக்கு ஸ்க்ரீன் 120Hz ரெப்ராஸ் ரேட்டுடன் வழங்கும். இந்த போன் HD+ ரேசளுசன் சப்போர்டுடன் கொண்டுவரப்பட்டுள்ளது

ப்ரோசெசர்

டெக்னோ Spark Go 1 யில் Unisoc T615 ப்ரோசெசருடன் அறிமுகப்படுத்தப்பட்டது. இது தவிர, இந்த போன் பல்வேறு கான்பிக்ரேசனுடன் கொண்டு வரப்பட்டுள்ளது-

ரேம் மற்றும் ஸ்டோரேஜ்

இதில் 4ஜிபி வரை ரேம் உள்ளது, மேலும் இது 4ஜிபி வரை விர்ச்சுவல் ரேமாக அதிகரிக்கலாம். ஸ்டோரேசிற்கு இது 64 ஜிபி மற்றும் 128 ஜிபி இடத்தின் ஸ்டோரேஜை கொண்டுள்ளது.

கேமரா

டெக்னோ போனின் கேமரா விவரக்குறிப்புகளைப் பற்றி பேசுகையில், ஃபோன் 13MP பிரதான சென்சார் மற்றும் 8MP செல்ஃபி ஸ்னாப்பருடன் காணப்படுகிறது. மொபைலின் பின் பேனலில் கேமரா தீவுடன் வட்ட வடிவம் காணப்பட்டது.

பேட்டரி மற்றும் கனெக்டிவிட்டி

பேட்டரி பற்றி பேசுகையில், இந்த டெக்னோ ஃபோன் 5000mAh பேட்டரி மற்றும் 15W ஃபாஸ்ட் சார்ஜ் உடன் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் இதில் சார்ஜிங்க்கு Type-C சப்போர்ட் வழங்கப்படுகிறது

இதை தவிர கனேக்டிவிட்டிக்கு சைட் மவுண்டேட் பிங்கர்ப்ரின்ட் ஸ்கேனர் வழங்கப்படுகிறது இது பவர் பட்டனில் உள்ளது. ஈரமான மற்றும் மென்மையான கைகளாலும் போனை இயக்க முடியும் என்று நிறுவனம் கூறுகிறது. இந்த போனுக்கு IP54 ரேட்டிங் வழங்கப்பட்டுள்ளது.

விலை தகவல்

தற்போது, ​​Tecno Spark Go 1 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் கிடைக்கும் தன்மை குறித்து எந்த தகவலும் வழங்கப்படவில்லை. இந்த போனின் விலை குறித்த அப்டேட்டை நிறுவனம் விரைவில் வெளியிடலாம்.மேலும் போனின் மற்ற தகவல்களை அதிகரபூவ வெப்சைட்டிலும் பார்க்கலாம்.

இதையும் படிங்க iQOO Z9s மற்றும் Z9s Pro போன் அறிமுகம் ஸ்லிம் போனாக இருக்கும்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo