Tecno ஸ்மார்ட்போனை iphone தோற்றத்தில் அறிமுகம் செய்துள்ளது

Tecno ஸ்மார்ட்போனை iphone தோற்றத்தில் அறிமுகம் செய்துள்ளது
HIGHLIGHTS

Tecno Spark 20C ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது,

Tecno Spark 20C கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஸ்பார்க் 20சி' ஆனது ஆடம்பரமான ஐபோன் போன்று தோற்றமளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Tecno Spark 20C ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது, டெக்னோவின் பல ஸ்மார்ட்போன்களைப் போலவே, இதுவும் பிரீமியம் தோற்றத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.9 ஆயிரத்திற்கும் குறைவாக உள்ளது. ஸ்பார்க் 20சி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்பின்னர் ஒவ்வொன்றாக சந்தைகளை தாக்கி வருகிறது. இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட ‘ஸ்பார்க் 20சி’ ஆனது ஆடம்பரமான ஐபோன் போன்று தோற்றமளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 4 வண்ணங்களில் மற்றும் தோல் பின்புறத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Tecno Spark 20C Price in india

Tecno Spark 20C யின் விலை 8,999 ரூபாயாக இருக்கிறது, இந்த சிங்கிள் வேரியண்ட் 4ஜிபி + 128ஜிபியில் கிடைக்கும் மற்றும் மேஜிக் ஸ்கிரீன் கிரீன், மிஸ்டரி ஒயிட், கோல்ட் மற்றும் கிராவிட்டி பிளாக் கலர் விருப்பங்களில் லெதர் டிசைனுடன் கிடைக்கும். இது மார்ச் 5 முதல் Amazon யில் வாங்குவதற்கு கிடைக்கும்.

Spark 20C Specifications

Tecno Spark 20C ஸ்மார்ட்போன் iphone pro போன்ற தோற்றத்தில் தெரிகிறது Tecno Spark 20C 6.6 இன்ச் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது, இதில் பஞ்ச் ஹோல் உள்ளது. இது LCD பேனல், இது HD+ ரேசளுசன் மற்றும் 90Hz ரெப்ராஸ் ரேட் வழங்குகிறது. ஆப்பிளின் டைனமிக் ஐலேண்ட் அம்சத்தைப் போன்றே ‘டைனமிக் போர்ட்’ என்ற அம்சம் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட Itel P55 Plus யில் இதே போன்ற டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டது.

Tecno Spark 20C ப்ரோசெசர் பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை இதன் 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் வழங்கப்பட்டுள்ளது.

போனில் இரட்டை கேமரா செட்டிங் உள்ளது, இதில் 50 மெகாபிக்சல் பிரதான கேமரா சென்சார் உள்ளது. AI சென்சார் உள்ளது, முன்புறத்தில் 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க :Gmail உடன் மோதும் விதமாக வருகிறது Elon Musk யின் Xmail

கனேக்டிவிட்டியை பற்றி பேசினால், இது டூயல் சிம், 4ஜி, வைஃபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5மிமீ ஹெட்போன் ஜாக் போன்றவற்றுடன் வருகிறது. இதில் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் உள்ளது. Tecno Spark 20C ஆனது 5 ஆயிரம் mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, இது 18 வாட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo