Tecno Spark 20 இந்தியாவில் அறிமுகம், ஒரு வருடம் வரை Free 19 OTT சப்ஸ்க்ரிப்சன் கிடைக்கும்

Updated on 31-Jan-2024

Tecno Spark 20 இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் முதன்முதலில் டிசம்பர் 2023 இல் உலகளவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது MediaTek யின் சிப்செட் மற்றும் 5000mAh பேட்டரியுடன் வருகிறது. இந்த போனில் கேமரா பிரிவில், இரட்டை பின்புற கேமரா செட்டிங் மற்றும் பின்புறம் மற்றும் முன் இரண்டிலும் இரட்டை LED ஃபிளாஷ் யூனிட் கிடைக்கிறது. அதன் அனைத்து விலை மற்றும் சிறப்பம்சங்களை பற்றி பார்க்கலாம்

Tecno Spark 20 விலை மற்றும் விற்பனை

இந்தியாவில் இந்த போனின் விலை ரூ.10,499 ஆக வைக்கப்பட்டுள்ளது. இது சைபர் ஒயிட், கிராவிட்டி பிளாக், மேஜிக் ஸ்கின் 2.0 (ப்ளூ) மற்றும் நியான் கோல்ட் வண்ண விருப்பங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது பிப்ரவரி 2, மதியம் 12 மணி முதல் அமேசானில் பிரத்தியேகமாக நாட்டில் வாங்குவதற்குக் கிடைக்கும்.

ஒவ்வொரு TECNO Spark 20 மாடலை வாங்கும்போதும், SonyLIV, Zee5, Lionsgate Play மற்றும் Fancode போன்ற 19 OTT இயங்குதளங்களுக்கான அணுகலை உள்ளடக்கிய ஒரு வருடத்திற்கு ரூ.4,897 மதிப்பிலான OTTplay சந்தாவை இலவசமாக வழங்குவதாக TECNO அறிவித்துள்ளது.

Spark 20 Specifications

டெக்னோவின் இந்த புதிய போனனது 6.6 இன்ச் HD+ LCD ஸ்க்ரீனுடன் 90Hz ரெப்ராஸ் ரேட் சப்போர்ட் செய்கிறது இந்த ஃபோனில் MediaTek Helio G85 செயலி பொருத்தப்பட்டுள்ளது, இது 8GB ரேம் மற்றும் 256GB உள் சேமிப்பகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக 8ஜிபியுடன் ரேமை கிட்டத்தட்ட 16ஜிபி வரை விரிவுபடுத்தலாம். சாதனம் ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான HiOS 13 உடன் வருகிறது.

கேமரா பற்றி பேசினால் ஸ்பார்க் 20 ஆனது 50MP ப்ரைமரி பின்புற சென்சார் மற்றும் செகண்டரி சென்சார் ஆகியவற்றைப் வழங்குகிறது. இதன் முன் கேமராவில் 32MP சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. இந்த போனில் டெக்னோவின் டைனமிக் போர்ட் சாப்ட்வேர் அம்சமும் உள்ளது, இது ஆப்பிளின் டைனமிக் போர்ட் போல செயல்படுகிறது, இது டிஸ்ப்ளேவின் மேற்புறத்தில் உள்ள செல்ஃபி கேமரா கட்அவுட்டைச் சுற்றிக் காணப்படுகிறது. அதன் பாப்-அப் பாரில் நோட்டிபிகேசங்கள் மற்றும் சார்ஜிங் ஸ்டேட்டஸ் கால் போன்ற பிற அலர்ட்களை காட்டுகிறது.

இதையும் படிங்க: Amazon Prime Video பயனர்களுக்கு அதிர்ச்சி இனி அதிகம் பணம் கொடுக்கணும்

இது தவிர, இந்த ஃபோன் 18W வயர்டு சார்ஜிங்கை சப்போர்ட் செய்யும் 5000mAh பேட்டரியில் இயங்குகிறது. சாதனம் 4G, WiFi, GNSS மற்றும் புளூடூத் 5.2 இணைப்புகளையும் ஆதரிக்கிறது. பாதுகாப்பிற்காக, பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர்ப்ரின்ட் சென்சார் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் டஸ்ட் மற்றும் வாட்டர் ரேசிடண்டிர்க்கான செக்யுரிட்டிக்காக IP53 ரேட்டிங்கை வழங்குகிறது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :