Tecno அறிமுகப்படுத்தியது Tecno Spark 10 Pro Moon Explorer எடிசன் இதன் சிறப்பு என்ன
சந்திரயான்-3 வெற்றியை ஒவ்வொரு இந்தியரும் வெவ்வேறு வழிகளில் கொண்டாடி வருகின்றனர்
டெக்னோவில் இருந்து புதிய ஸ்மார்ட்போன் ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது
தன் பெயர் Tecno Spark 10 Pro Original Explorer.
சந்திரயான்-3 வெற்றியை ஒவ்வொரு இந்தியரும் வெவ்வேறு வழிகளில் கொண்டாடி வருகின்றனர். அத்தகைய சூழ்நிலையில், ஸ்மார்ட்போன் பிராண்ட் டெக்னோவும் பின்தங்கவில்லை. டெக்னோவில் இருந்து புதிய ஸ்மார்ட்போன் ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் பெயர் Tecno Spark 10 Pro Original Explorer. இந்த போனின் டிசைன் சந்திரயான் 3 மூலம் ஈர்க்கப்பட்டதாக நிறுவனம் கூறுகிறது. போன 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் விருப்பத்தில் வருகிறது. மேலும் இந்த போன் லெதர் டிசைனில் வருகிறது.
News Flash: TECNO successfully launches its MOON EXPLORER
Introducing all new Spark 10 Pro Moon Explorer Edition: A Lunar-Inspired Lens That's Simply Irresistible!
Prebook now at nearest retail stores.
Check here: https://t.co/BABS1zsMvQ#TECNO #Spark10Pro #MoonExplorer pic.twitter.com/KzAgPbB1fF— TECNO Mobile India (@TecnoMobileInd) September 7, 2023
உங்கள் தகவலுக்கு, Tecno Spark 10 pro ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது டெக்னோ ஸ்பார்க் 10 ப்ரோ மூன் எக்ஸ்ப்ளோரர் எடிசன் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இருப்பினும், அதிகாரப்பூர்வ அறிமுகத்தின் போது, வாடிக்கையாளர்கள் Tecno Spark 10 Pro Moon Explorer Edition முன்பதிவு செய்து தங்கள் அருகிலுள்ள சில்லறை விற்பனைக் கடைக்குச் சென்று முன்பதிவு செய்யலாம் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
விலை ஆபர் மற்றும் முன் பதிவு
நீங்கள் 7 செப்டம்பர் 2023 முதல் Tecno Spark 10 Pro Moon Explorer ஸ்மார்ட்போனை முன்பதிவு செய்ய முடியும். இதன் முதல் விற்பனை செப்டம்பர் 15, 2023 முதல் தொடங்கும். போன கருப்பு மற்றும் வெள்ளை லெதர் டிசைனில் வருகிறது. சுற்றுச்சூழலுக்கு உகந்த சிலிகான் டிசைன் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனை ரூ.11999 விலையில் முன்பதிவு செய்யலாம்.
Tecno Spark 10 Pro சிறப்பம்சம்
Tecno SPARK 10 Pro Moon Explorer எடிசன் நிலவின் மேற்பரப்பு போன்ற உண்மையான தோற்றம் காணப்படுகிறது. இது இரட்டை நிழல் shade )வடிவமைப்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தொலைபேசியில் 6.78 இன்ச் FHD+ டாட் யின் டிஸ்ப்ளே உள்ளது. இதன் ரெப்ரஸ் ரேட்90Hz ஆகும். டச் செம்பளிங் ரேட் 270Hz ஆகும். ஃபோன் 580 நிட்களின் ஹை ப்ரைட்னஸ் கொண்டுள்ளது
, இது அல்ட்ரா கிளியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 32MP செல்ஃபி கேமராவைக் காணலாம். அதேசமயம் பின்புறத்தில் 50எம்பி டூயல் கேமரா அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. மெமரி கார்டு மூலம் போனின் இடத்தை 1TB வரை அதிகரிக்கலாம். இந்த போன் Android 13 அடிப்படையிலான HiOS 12.6 யில் வேலை செய்கிறது. ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி88 சிப்செட் ஆதரவு போனில் வழங்கப்பட்டுள்ளது. இதில் 5000mAh லித்தியம் அயன் பேட்டரி உள்ளது. மேலும் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் கிடைக்கிறது
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile