Tecno அதன் குறைந்த விலை 5G போன் Dimensity 6020 SoC உடன் அறிமுகமாகும்..

Tecno அதன் குறைந்த விலை 5G போன் Dimensity 6020 SoC உடன் அறிமுகமாகும்..
HIGHLIGHTS

டெக்னோ ஸ்பார்க் 10 5ஜியை செவ்வாயன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது

டெக்னோ ஸ்பார்க் 10 5ஜி மாடல் இந்திய சந்தையில் மெட்டா பிளாக், மெட்டா வைட் மற்றும் மெட்டா புளூ என மூன்றுவிதமான நிறங்களில் கிடைக்கிறது.

இதன் விலை ரூ. 12 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை ஏப்ரல் 7 ஆம் தேதி துவங்குகிறது.

ஸ்மார்ட்போன் பிராண்டான டெக்னோ தனது குறைந்த விலை ஃபோன் டெக்னோ ஸ்பார்க் 10 5ஜியை செவ்வாயன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. 13 ஆயிரத்துக்கும் குறைவான விலையில் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போனில் MediaTek Dimensity 6020 செயலி பொருத்தப்பட்டுள்ளது. 5,000mAh பேட்டரி மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு போனுடன் கிடைக்கிறது. நிறுவனம் சமீபத்தில் டெக்னோ ஸ்பார்க் 10 ப்ரோ ஸ்மார்ட்போனையும் அறிமுகப்படுத்தியது, இது ஸ்பெயினின் பார்சிலோனாவில் நடந்த மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் 2023 இல் அறிமுகப்படுத்தப்பட்டது.

விலை மற்றும் விற்பனை விவரங்கள்: 

டெக்னோ ஸ்பார்க் 10 5ஜி மாடல் இந்திய சந்தையில் மெட்டா பிளாக், மெட்டா வைட் மற்றும் மெட்டா புளூ என மூன்றுவிதமான நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 12 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை ஏப்ரல் 7 ஆம் தேதி துவங்குகிறது.

Tecno Spark 10 5G சிறப்பம்சம்.

டெக்னோ ஸ்பார்க் 10 ப்ரோ 5ஜி மாடலில் ஸ்பார்க் டெக்ஸ்ச்சர் ஸ்டிட்ச், க்ளிட்டரிங் பேக் உள்ளது. இத்துடன் 6.6 இன்ச் HD+ டாட் நாட்ச் டிஸ்ப்ளே, மீடியாடெக் டிமென்சிட்டி 6020 பிராசஸர், ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஹைஒஎஸ் 12.6 வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 10-பேண்ட் சப்போர்ட் உடன் 5ஜி கனெக்டிவிட்டி வழங்குகிறது.

மெமரியை பொருத்தவரை 8 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி கொண்டிருக்கும் டெக்னோ ஸ்பார்க் 10 5ஜி மாடலில் புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, ஏஐ லென்ஸ், 8MP செல்ஃபி கேமரா உள்ளது. இவைதவிர பக்கவாட்டில் கைரேகை சென்சார், ஃபேஸ் அன்லாக் வசதி, 5000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் ஃபிளாஷ் சார்ஜ் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo