Tecno இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவின் முதல் மெல்லிய போன் 6000mAh பேட்டரி இருக்கும்
Tecno Pova 6 Pro 5G இந்திய அறிமுக தேதி வெளியானது, மற்றும் இது நாளை என்ட்ரி கொடுக்க போகிறது
Amazon India யில் இந்த போனின் டெடிகேட்டட் மைக்ரோசைட் லைவ் செய்யப்பட்டுள்ளது
ova 6 Pro 5G இன் வெளியீட்டு தேதி, அம்சங்கள், விவரக்குறிப்புகள், விலை மற்றும் பிற விவரங்களைப் பார்ப்போம்.
Tecno Pova 6 Pro 5G இந்திய அறிமுக தேதி வெளியானது, மற்றும் இது நாளை என்ட்ரி கொடுக்க போகிறது. இந்த கேமிங் ஸ்மார்ட்போன் கடந்த மாதம் பார்சிலோனாவில் நடந்த மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் (MWC) 2024 யின் போது காட்சிப்படுத்தப்பட்டது. இந்த போன் Tecno POVA 5 Proவின் வாரிசாக சந்தைக்கு வர உள்ளது.
Amazon India யில் இந்த போனின் டெடிகேட்டட் மைக்ரோசைட் லைவ் செய்யப்பட்டுள்ளது இதன் மூலம் கிட்டத்தட்ட அனைத்து தகவல்களும் வெளியாகியுள்ளன. எனவே Pova 6 Pro 5G இன் வெளியீட்டு தேதி, அம்சங்கள், விவரக்குறிப்புகள், விலை மற்றும் பிற விவரங்களைப் பார்ப்போம்.
Tecno Pova 6 Pro: Launch Details
டெக்னோவின் இந்த அப்கம்மிங் போன் வெள்ளிகிழமை 29 மார்ச் பகல் 12 மணிக்கு அறிமுகமாகும், இந்த நிகவை Amazon miniTV யில் லைவ் ஸ்ட்ரீமிங் செய்யப்படும்.
Pova 6 Pro: Price
Tecno Pova 6 Pro யின் விலையை பற்றி பேசினால், சுமார் 15,000 ரூபாய் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Tecno Pova 6 Pro சிறப்பம்சம்.
இந்த ஸ்மார்ட்போன் MWC 2024யில் இதன் தகவல் ஏற்கனவே வெளியாகியுள்ளது,, Tecno Pova 6 Pro யில் 6.78 இன்ச் AMOLED டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது, இதன் ரேசளுசன் FHD+ மற்றும் 120Hz ரெப்ராஸ் ரேட் வழங்கப்பட்டுள்ளது, கேமரா செட்டிங்கிற்க்கு போனின் முன்பக்கத்தில் 32 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா உள்ளது. இந்த போனில் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளன. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான HiOS 14 இல் வேலை செய்கிறது. இது இன்-ஸ்கிரீன் கைரேகை ஸ்கேனர் மற்றும் பின்புறத்தில் LED பிளாஷ் அமைப்பைக் கொண்டுள்ளது.
Tecno Pova 6 Pro 70W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான சப்போர்டுடன் 6,000mAh பேட்டரி கொண்ட இந்தியாவின் முதல் போனாக இருக்கும் என்று பிராண்ட் வெளியிட்ட போஸ்டர் கூறுகிறது. இது 12 ஜிபி ரேம், 12 ஜிபி வெர்சுவல் ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்டிருக்கும். Pova 6 Pro ஆனது MediaTek Dimensity 6080 சிப்செட்டைக் கொண்டிருக்கும் என்பதை X யில் அதன் Pova மொபைல் அக்கவுண்டில் மூலம் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. ஆப்டிகல் கேமிங் அனுபவத்திற்கான இடம் இருக்கும்.
பிராண்டின் படி, Pova 6 Pro ஆனது -20 டிகிரி செல்சியஸ் மிகக் குறைந்த வெப்பநிலையில் சார்ஜ் செய்வதை சப்போர்ட் செய்கிறது, இதன் காரணமாக முக்கியமான நிலையில் சார்ஜிங் நடைபெறுகிறது. இது 6 ஆண்டுகள் நீடிக்கும், இதில் 1600 அல்லது அதற்கு மேற்பட்ட சார்ஜ்களுக்குப் பிறகும் பேட்டரி 80 சதவீதம் அல்லது அதற்கு மேல் ஆரோக்கியமாக இருக்கும். இது தவிர, போனில் IP53-மதிப்பிடப்பட்ட சேஸ் இருக்கும். Pova 6 Pro பற்றிய மேலும் சில தகவல்களை வரும் நாட்களில் நிறுவனம் பகிரலாம்.
இதையும் படிங்க: WWDC 2024:Apple யின் மிக பெரிய Event தேதி அறிவிப்பு
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile