Tecno இந்தியாவில் அதன் புதிய ஸ்மார்ட்போன் Tecno POVA 6 Neo இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது இது மிட் ரேன்ஜ் பிரிவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் AI அம்சத்துடன் வருகிறது அதாவது இதில் AI மேஜிக் எரேசர் , AI கட்அவுட், AI வால்பேப்பர், ஆர்ட்போர்டு மற்றும் Ask AI போன்ற AI அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. HD+ ரெசளுசனுடன் வருகிறது மேலும் விலை மற்றும் அம்சங்கள் பற்றி பார்க்கலாம்.
Tecno POVA 6 Neo மிட்நைட் ஷேடோ, அஸூர் ஸ்கை மற்றும் அரோரா கிளவுட் கலர் விருப்பங்களில் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் விலை 6ஜிபி + 128ஜிபி மாடலுக்கு ரூ.11,999 மற்றும் 8ஜிபி + 256ஜிபி மாடலுக்கு ரூ.12,999. 1000 எக்ஸ்சேஞ்ச் சலுகையும் உண்டு. அமேசான் தவிர, அருகிலுள்ள சில்லறை விற்பனைக் கடைகளில் போனை வாங்கலாம்.
டிஸ்ப்ளே
Tecno POVA 6 Neo ஆனது 6.67 இன்ச் HD Plus டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இதன் தீர்மானம் 720×1600 பிக்சல்கள். டிஸ்ப்ளே 120 ஹெர்ட்ஸ் ரெப்ராஸ் ரேட்டை கொண்டுள்ளது. இதன் ப்ரைட்னாஸ் 480 நிட்ஸ் இருக்கிறது
கேமரா
Tecno POVA 6 Neo கேமராவை பற்றி பேசினால், இதில் மெயின் கேமரா 108MP கொண்ட AI கேமரா உடன் இந்த போன் இந்த செக்மண்டில் வரும் முதல் போன் ஆகும் மேலும் இதில் செல்பிக்கு 8MP கேமரா இருக்கிறது
ப்ரோசெசர் மற்றும் ரேம் / ஸ்டோரேஜ்
Tecno POVA 6 ஆனது MediaTek யின் Dimensity 6300 5G ப்ரோசெசர் கொண்டுள்ளது. இதனுடன் அதிகபட்சமாக 8 ஜிபி ரேம் சேர்க்கப்பட்டுள்ளது. இது 8 ஜிபி மற்றும் 16 ஜிபி வரை நீட்டிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. போனில் 256 ஜிபி வரை உள் சேமிப்பு உள்ளது. SD கார்டு மூலம் 1 TB வரை அதிகரிக்க முடியும்.
பேட்டரி மற்றும் கனெக்டிவிட்டி
Tecno POVA 6 ஆனது சமீபத்திய ஆண்ட்ராய்டு 14 யில் இயங்குகிறது, இது HiOS 14.5 உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த போனில் 5 ஆயிரம் mAh பேட்டரி உள்ளது, இது 18 வாட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது Tecno POVA 6 5G ஆனது 5 ஆண்டுகளுக்கு லேக் இலவச பர்போமன்சை வழங்குகிறது என்று நிறுவனம் கூறுகிறது. இதில் இன்ஃப்ராரெட் சென்சார், என்எப்சி மற்றும் லைட் சென்சார் வசதி உள்ளது. மேலும் இதன் இடை 192.3 கிராம் ஆகும்.
இதையும் படிங்க :iPhone 16 அறிமுகத்திற்க்கு பிறகு iPhone 14 யின் விலையில் அதிரடி குறைப்பு