Tecno அறிமுகம் செய்தது முதல் முறையாக AI யில் கலக்கும் ஸ்மார்ட்போன் டாப் அம்சம்

Tecno அறிமுகம் செய்தது முதல் முறையாக AI யில் கலக்கும் ஸ்மார்ட்போன் டாப் அம்சம்
HIGHLIGHTS

Tecno இந்தியாவில் அதன் புதிய ஸ்மார்ட்போன் Tecno POVA 6 Neo இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது

அதாவது இதில் AI மேஜிக் எரேசர் , AI கட்அவுட், AI வால்பேப்பர், ஆர்ட்போர்டு மற்றும் Ask AI போன்ற AI அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

Tecno POVA 6 Neo மிட்நைட் ஷேடோ, அஸூர் ஸ்கை மற்றும் அரோரா கிளவுட் கலர் விருப்பங்களில் கொண்டு வரப்பட்டுள்ளது.

Tecno இந்தியாவில் அதன் புதிய ஸ்மார்ட்போன் Tecno POVA 6 Neo இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது இது மிட் ரேன்ஜ் பிரிவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் AI அம்சத்துடன் வருகிறது அதாவது இதில் AI மேஜிக் எரேசர் , AI கட்அவுட், AI வால்பேப்பர், ஆர்ட்போர்டு மற்றும் Ask AI போன்ற AI அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. HD+ ரெசளுசனுடன் வருகிறது மேலும் விலை மற்றும் அம்சங்கள் பற்றி பார்க்கலாம்.

Tecno POVA 6 Neo Price in india

Tecno POVA 6 Neo மிட்நைட் ஷேடோ, அஸூர் ஸ்கை மற்றும் அரோரா கிளவுட் கலர் விருப்பங்களில் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் விலை 6ஜிபி + 128ஜிபி மாடலுக்கு ரூ.11,999 மற்றும் 8ஜிபி + 256ஜிபி மாடலுக்கு ரூ.12,999. 1000 எக்ஸ்சேஞ்ச் சலுகையும் உண்டு. அமேசான் தவிர, அருகிலுள்ள சில்லறை விற்பனைக் கடைகளில் போனை வாங்கலாம்.

Tecno POVA 6 Neo டாப் சிறப்பம்சம்.

டிஸ்ப்ளே

Tecno POVA 6 Neo ஆனது 6.67 இன்ச் HD Plus டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இதன் தீர்மானம் 720×1600 பிக்சல்கள். டிஸ்ப்ளே 120 ஹெர்ட்ஸ் ரெப்ராஸ் ரேட்டை கொண்டுள்ளது. இதன் ப்ரைட்னாஸ் 480 நிட்ஸ் இருக்கிறது

கேமரா

Tecno POVA 6 Neo கேமராவை பற்றி பேசினால், இதில் மெயின் கேமரா 108MP கொண்ட AI கேமரா உடன் இந்த போன் இந்த செக்மண்டில் வரும் முதல் போன் ஆகும் மேலும் இதில் செல்பிக்கு 8MP கேமரா இருக்கிறது

ப்ரோசெசர் மற்றும் ரேம் / ஸ்டோரேஜ்

Tecno POVA 6 ஆனது MediaTek யின் Dimensity 6300 5G ப்ரோசெசர் கொண்டுள்ளது. இதனுடன் அதிகபட்சமாக 8 ஜிபி ரேம் சேர்க்கப்பட்டுள்ளது. இது 8 ஜிபி மற்றும் 16 ஜிபி வரை நீட்டிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. போனில் 256 ஜிபி வரை உள் சேமிப்பு உள்ளது. SD கார்டு மூலம் 1 TB வரை அதிகரிக்க முடியும்.

பேட்டரி மற்றும் கனெக்டிவிட்டி

Tecno POVA 6 ஆனது சமீபத்திய ஆண்ட்ராய்டு 14 யில் இயங்குகிறது, இது HiOS 14.5 உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த போனில் 5 ஆயிரம் mAh பேட்டரி உள்ளது, இது 18 வாட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது Tecno POVA 6 5G ஆனது 5 ஆண்டுகளுக்கு லேக் இலவச பர்போமன்சை வழங்குகிறது என்று நிறுவனம் கூறுகிறது. இதில் இன்ஃப்ராரெட் சென்சார், என்எப்சி மற்றும் லைட் சென்சார் வசதி உள்ளது. மேலும் இதன் இடை 192.3 கிராம் ஆகும்.

இதையும் படிங்க :iPhone 16 அறிமுகத்திற்க்கு பிறகு iPhone 14 யின் விலையில் அதிரடி குறைப்பு

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo