வெறும் 10 ஆயிர பட்ஜெட்டில் Tecno புதிய போனை அறிமுகம் செய்தது

Updated on 24-Sep-2024
HIGHLIGHTS

Tecno Pop 9 5G இந்தியாவில் புதிய போனை அறிமுகம் செய்தது

புதிய டெக்னோ போனில் MediaTek's Dimension 6300 ப்ரோசெசர் உள்ளது.

இந்தியாவில் இதன் விலை ரூ10 ஆயிரத்திற்கும் குறைவாகவே வைக்கப்பட்டுள்ளது

Tecno Pop 9 5G இந்தியாவில் புதிய போனை அறிமுகம் செய்தது, இது நிறுவனத்தின் பட்ஜெட் டிவைஸ் மற்றும் 48MP கேமரா மற்றும் NFC சப்போர்ட் போன்ற அம்சங்களுடன் நிரம்பியுள்ளது. புதிய டெக்னோ போனில் MediaTek’s Dimension 6300 ப்ரோசெசர் உள்ளது. தற்போது முன்பதிவு செய்யலாம். இது அக்டோபரில் விற்பனைக்கு வரும். புதிய டெக்னோ போன் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட டெக்னோ பாப் 8 இன் வாரிசு ஆகும். இந்தியாவில் இதன் விலை ரூ10 ஆயிரத்திற்கும் குறைவாகவே வைக்கப்பட்டுள்ளது.

Tecno Pop 9 5G இந்திய விலை மற்றும் விற்பனை தகவல்

Tecno Pop 9 5Gஇந்தியாவில் ஆரம்ப விலை 9,499ரூபாயாகும் இவை 4 ஜிபி + 64 ஜிபி மாடலின் விலைகள். 4ஜிபி + 128ஜிபி மாடலின் விலை ரூ.9999. அமேசானில் முன்பதிவு செய்யலாம். முதல் விற்பனை அக்டோபர் 7 ஆம் தேதி நடைபெறும்.

499 ரூபாய்க்கு இந்த போனை முன்பதிவு செய்யலாம் என Amazon தெரிவித்துள்ளது. அந்தப் பணம் Amazon Pay இருப்புத் தொகையாகத் திருப்பித் தரப்படும். அரோரா கிளவுட், அஸூர் ஸ்கை மற்றும் மிட்நைட் ஷேடோ ஆகிய மூன்று வண்ண விருப்பங்களில் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நிறுவனம் போனுடன் இரண்டு காம்ப்ளிமெண்ட்ரி ஃபோன் ஸ்கின்களையும் வழங்குகிறது.

Tecno Pop 9 5G யின் டாப் அம்சம்

Tecno Pop 9 5G யின் அம்சங்களை பற்றி பேசினால் LCD ஸ்க்ரீன் வழங்கப்படுகிறது, இருப்பினும் இதை பற்றி வேறு எந்த தகவலும் இல்லை மேலும் இதில் 120hz டிஸ்பிளே வழங்கப்படுகிறது

இந்த போனில் மீடியாடேக் டிமான்சிட்டி 6300 ப்ரோசெசர் வழங்கப்படுகிறது இதில் 4GB ரேம் மற்றும் 128 ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது

இந்த போனின் கேமராவை பற்றி பேசுகையில் இதன் மெயின் கேமரா 48மெகாபிக்ஸல் Sony IMX582 பின் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது இதனுடன் LED பிளாஷ் வசதியும் வழங்கப்படுகிறது. இதை தவிர இந்த போனில் செல்பி கேமராவுக்கு 8 மெகாபிக்ஸல் கேமரா முன் பக்கத்தில் வழங்கப்பட்டுள்ளது

Tecno Pop 9 5G

இதை தவிர இதில் டூயல் ஸ்பீக்கர் வழங்கப்படுகிறது மற்றும் இதில் டால்பி அட்மோஸ் சப்போர்ட் வழங்கப்படுகிறது

Tecno Pop 9 5G ஆனது 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இது 18 வாட் வயர்டு சார்ஜிங்கை ஆதரிக்கிறது. தொலைபேசியில் ஐஆர் பிளாஸ்டர் வழங்கப்பட்டுள்ளது, எனவே நீங்கள் அதை ரிமோட்டாகப் பயன்படுத்தலாம். 189 கிராம் எடையுள்ள, டெக்னோ பாப் 9 5ஜி, என்எப்சியை சப்போர்ட் பிரிவில் முதல் 5ஜி என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க Redmi Note 14 Pro அறிமுக தகவல் வெளியானது எப்போன்னு பாருங்க

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :