Tecno Pop 8 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய அறிமுகத்துடன் நிறுவனம் தனது என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போன் வரிசையை விரிவுபடுத்தியுள்ளது. இந்த போன் 90Hz டிஸ்ப்ளேவை வழங்குகிறது மற்றும் ஆக்டா-கோர் சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது. இந்த போன் குறைந்த விலை டெக்னோ ஸ்மார்ட்போன் 12எம்பி ப்ரைம் கேமரா மற்றும் சைட் மவுண்டேட் பிங்கர்ப்ரின்ட் சென்சார் உடன் வருகிறது.
Pop 8 ஸ்மார்ட்போன் க்ரேவெட்டி ப்ளாக் மற்றும் மிஸ்ட்ரி வைட் கலர் ஆப்சனில் வருகிறது, இதன் விலை 6,499 ரூபாயில் வருகிறது, வாடிக்கையாளர்கள் இந்த ஸ்மார்ட்போனை Amazon.in மூலம் ஜனவரி 9, 2024 முதல் வாங்க முடியும். இந்த போன் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ரூ.5,999 தள்ளுபடி விலையில் கிடைக்கும் என்றும் நிறுவனம் அறிவித்துள்ளது.
டேக்நோவின் இந்த புதிய போனில் 6.6-இன்ச் HD+ டிஸ்ப்ளே உடன் வருகிறது, இது 1612×720 பிக்சல் ரேசளுசனுடன் வழங்குகிறது, இதன் டிஸ்ப்ளே 90Hz ரெப்ராஸ் ரேட் உடன் வருகிறது
பர்போமன்சுக்காக இந்த ஃபோன் ஆக்டா கோர் யூனிசாக் T606 சிப்செட்டில் இயங்குகிறது, இந்த போன் ஆண்ட்ராய்டு 13 பிளாட்பார்மின் அடிப்படையில் நிறுவனத்தின் சொந்த லேயர் HiOS 13 உடன் வருகிறது.
இது 4ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது, இந்த போனில் 64ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வழங்குகிறது, இது மைக்ரோ SD கார்டு வழியாக 256ஜிபி வரை அதிகரிக்க முடியும். இந்த என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போனில் டுயள் சிம் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த போனில் கேமராவுக்கு இதில் 12MP பின் கேமரா மற்றும் செகண்டரி கேமரா AI லேன்சுடன் வருகிறது. இதை தவிர முன் பக்கத்தில் டுயள் LED பிளாஷுடன் 8MP செல்பி ஷூட்டார் வழங்கப்படுகிறது
இதையும் படிங்க:Reliance Jio விரைவில் கொண்டு வரும் சேட்லைட் இன்டர்நெட் சேவை
இந்த போனின் பேட்டரி 5000mAh உடன் 10W சார்ஜிங் சப்போர்ட்டும் கொண்டுள்ளது.