டேப்லெட் போன்றிருக்கும் ரோலபில் ஸ்லைடிங் ஸ்கிரீன் கொண்ட கான்செப்ட் போன் தகவல் லீக்.

டேப்லெட் போன்றிருக்கும்  ரோலபில் ஸ்லைடிங் ஸ்கிரீன் கொண்ட கான்செப்ட் போன் தகவல் லீக்.
HIGHLIGHTS

டெக்னோ ஃபேண்டம் விஷன் வி கான்செப்ட் போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது

இது வழக்கமான மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களில் இருந்து வித்தியாசமானதாக இருக்கிறது

இந்த சாதனம் ஏரோஸ்பேஸ் கிரேடு டைட்டானியம் அலாய் கேசிங், டியுரபில் ஹின்ஜ் மற்றும் காப்புரிமை பெற்ற டிசைன் கொண்டுள்ளது

டெக்னோ ஃபேண்டம் விஷன் வி கான்செப்ட் போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. எனினும், இது வழக்கமான மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களில் இருந்து வித்தியாசமானதாக இருக்கிறது. ரோலபில் ஸ்லைடிங் ஸ்கிரீன் இருப்பதே இதன் முக்கிய அம்சமாக உள்ளது. மேலும் இது கான்செப்ட் மாடல் என்பதால், எப்போது வர்த்தக ரீதியாக அறிமுகமாகும் என்பதும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.

இந்த சாதனம் ஏரோஸ்பேஸ் கிரேடு டைட்டானியம் அலாய் கேசிங், டியுரபில் ஹின்ஜ் மற்றும் காப்புரிமை பெற்ற டிசைன் கொண்டுள்ளது. மடிக்கப்பட்ட நிலையில், இந்த சாதனம் சாதாரன ஸ்மார்ட்போன் போன்றே காட்சியளிக்கிறது. இதன் உள்புற டிஸ்ப்ளே 10.1 இன்ச் ஸ்கிரீன் கொண்டிருக்கிறது. புது கான்செப்ட் மாடல் பற்றி டெக்னோ சார்பில் இதுவரை எந்த தகவலும் இல்லை.

புது கான்செப்ட் போன் குறித்து வெளியாகி இருக்கும் வீடியோவில் ஸ்மார்ட்போன் மடிக்கப்பட்ட நிலையில் காட்சியளிக்கிறது. மேலும் மெல்லிய பெசல்கள், வளைந்த எட்ஜ் கொண்டிருக்கிறது. இதன் பின்புறம் மூன்று கேமரா சென்சார்கள், குவாட் எல்இடி ஃபிலாஷ் உள்ளது. இதன் கேமரா செட்டப் கீழ் சிறிய டிஸ்ப்ளே உள்ளது. இது நோட்டிஃபிகேஷன், ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே, ரிமைண்டர் உள்ளிட்டவைகளை வழங்குகிறது.

2023 சர்வதேச மொபைல் காங்கிரஸ் நிகழ்வு அடுத்த மாத இறுதியில் துவங்க இருக்கிறது. இந்த நிகழ்வில் பல்வேறு ஸ்மார்ட்போன் பிராண்டுகள் தங்களின் புது சாதனங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கலாம். எனினும், டெக்னோ தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை 2023 சர்வதேச மொபைல் காங்கிரஸ் நிகழ்வில் அறிமுகம் செய்யுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo