டெக்னோவின் முதல் போல்டப்பில் போன் அறிமுகம் இதன் டாப் பீச்சர் அம்சம் தெரிஞ்சிக்கோங்க.

Updated on 02-Mar-2023
HIGHLIGHTS

பார்சிலோனாவில் நடந்து வரும் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் 2023 இல் டெக்னோ புதிய ஃபோன் டெக்னோ பாண்டம் வி ஃபோல்டை அறிமுகப்படுத்தியுள்ளது.

Tecno Phantom V Fold பற்றி ஒரு கூற்று உள்ளது, இது இடமிருந்து வலமாக மடிக்கக்கூடிய உலகின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ஆகும்.

பார்சிலோனாவில் நடந்து வரும் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் 2023 இல் டெக்னோ புதிய ஃபோன் டெக்னோ பாண்டம் வி ஃபோல்டை அறிமுகப்படுத்தியுள்ளது. Tecno Phantom V Fold என்பது நிறுவனத்தின் முதல் மடிக்கக்கூடிய போன் ஆகும். Tecno Phantom V Fold பற்றி ஒரு கூற்று உள்ளது, இது இடமிருந்து வலமாக மடிக்கக்கூடிய உலகின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ஆகும்.

Tecno Phantom V Fold  சிறப்பம்சம்.

புதிய டெக்னோ ஃபேண்டம் V ஃபோல்டு மாடலில் 7.85 இன்ச் 2K+ ஃபோல்டபில் 10-120Hz LTPO AMOLED ஸ்கிரீன் மற்றும் 6.42 இன்ச் 1080p 120Hz-10-120Hz LTPO AMOLED ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது.

இதல் ஏரோஸ்பேஸ் தர புதுமைமிக்க டிராப்-வடிவ ஹின்ஜ் மற்றும் பிரத்யேகமாக ஃபிக்சட் ஆக்சிஸ் ரோடேட் மற்றும் ஸ்லைடு தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இதில் உள்ள ரிவர்ஸ் ஸ்னாப் ஸ்டிரக்ச்சர் மடிக்கும் அனுபவத்தை சிரமம் அற்றதாகவும், கிரீஸ் அற்றதாகவும் மாற்றுகிறது. இந்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் தரம் சுமார் இரண்டு லட்சம் முறைக்கும் அதிகமாக பரிசோதனை செய்யப்பட்டதாக டெக்னோ அறிவித்துள்ளது.

இதில் உள்ள மைக்ரோ-கர்வ்டு இரண்டாவது ஸ்கிரீன் ஸ்மார்ட்போனினை வைத்துக்கொள்ள எளிமையாக்குகிறது. இதன் பிளாக் நிறம் சருமத்திற்கு எந்தவிதமான பாதிப்புகளையும் ஏற்படுத்தாத லெதர் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள வைட் நிறம் மறுசுழற்சி செய்யப்பட்ட பசுமை சிலிகான் லெசர் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.

புதிய டெக்னோ ஃபேண்டம் V ஃபோல்டு மாடலில் மீடியாடெக் டிமென்சிட்டி 9000+ பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள ஹை ஒஎஸ்- ஃபோல்டு மற்றும் ஸ்ப்லிட் ஸ்கிரீன், பேரலல் விண்டோஸ் மற்றும் மடிக்கக்கூடிய ஸ்கிரீனுக்கு ஏற்ப ஆப்டிமைஸ் செய்யப்பட்டு இருக்கிறது

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :