Tecno Camon 20 ஸ்மார்ட்போன் மே மாத இறுதியில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனுடன், Camon 20 Pro 5G மற்றும் Camon 20 Premier 5G ஆகிய இரண்டு போன்களும் இந்தத் சீரிஸில் அறிமுகப்படுத்தப்பட்டன. இப்போது மூன்று மாதங்களுக்குப் பிறகு, பிராண்ட் இந்த போனின் சிறப்பு வேரியண்டை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. தயாரிப்பின் இந்தப் வெர்சன் அதிகாரப்பூர்வமாக Tecno Camon 20 Avocado Art Edition என்று அழைக்கப்படுகிறது. பெயர் குறிப்பிடுவது போல Avocado பழங்களால் ஈர்க்கப்பட்டுள்ளது.
பொதுவான Tecno Camon 20 ஆனது இந்தியாவில் Predawn Black மற்றும் Serenity Blue ஆகிய இரண்டு நிறத்தில் வருகிறது. முதல் வேரியண்டில் பிளாஸ்டிக் கொடுக்கப்பட்டுள்ளது, இரண்டாவதாக ஃபாக்ஸ் லெதர் ரியர் பேனல் கிடைக்கிறது.
இந்த போனின் புதிய Avocado Art Edition செரினிட்டி ப்ளூ கலர் ஆப்ஷனின் ஃபாக்ஸ் லெதரைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. இருப்பினும், இது பச்சை நிறத்தில் உள்ளது மற்றும் graffiti-style யில் avocados பழங்கள் அமைப்புகளைக் கொண்டுள்ளது.
பிரத்யேக ஃபினிஷிங் பெற்றிருந்தாலும், இந்த சிறப்பு எடிசனில் விலை முன்பு போலவே ரூ.15,999 ஆக வைக்கப்பட்டுள்ளது. இது அதன் செக்மென்ட்டில் சிறந்த தோற்றமுடைய போனின் ஒன்றாகும். ஆனால் இந்த புதிய எடிசன் அமேசானில் இன்னும் பட்டியலிடப்படவில்லை, அதே நேரத்தில் வழக்கமான நிற விருப்பங்கள் வாங்குவதற்கு கிடைக்கின்றன. அவகேடோ ஆர்ட் எடிஷன் ஆஃப்லைன் ரீடெய்ல் ஸ்டோர்களில் மட்டுமே உள்ளது, ஆனால் அது அமேசானிலும் கிடைக்கும் என்று நிறுவனம் உறுதி செய்துள்ளது.
இந்த போனின் சிறப்பம்சத்தை பற்றி பேசினால், Tecno Camon 20 ஸ்மார்ட்போனில் 6.67இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே, மீடியடேக் ஹிலியோ G85 சிப் 64MP பின் கேமரா மற்றும் இதன் முன் பக்கத்தில் 32MP கேமரா வழங்கப்படுகிறது, மேலும் இதில் 5000 mAh பேட்டரியுடன் 33W வயர்ட் சார்ஜிங் உடன் வருகிறது.
இது தவிர, 3.5mm ஹெட்ஃபோன் ஜாக், டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் இன்-ஸ்கிரீன் பிங்கர்ப்ரின்ட் சென்சார் ஆகியவையும் டெக்னோ கேமன் 20 யில் கிடைக்கின்றன.