Tecno Camon 30 சீரிஸ் இந்தியாவில் அறிமுகப்படுத்த தயாராக உள்ளது. இந்த சீரிஸை மே 18 ஆம் தேதி நாட்டில் அறிமுகப்படுத்துவதாக நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தத் சீரிஸின் Tecno Camon 30, Camon 30 5G, Camon 30 Pro மற்றும் Camon 30 Premier ஆகியவை அடங்கும். ஆனால் எந்தெந்த மாடல்களை இந்தியாவில் வெளியிடப் போகிறது என்பதை நிறுவனம் இன்னும் தெளிவுபடுத்தவில்லை. சமீபத்திய மேலும் இதை பற்றி எங்களுக்கு கிடைத்த தகவலை பார்க்கலாம்.
இந்தியாவில் Tecno Camon 30 அறிமுகம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அந்நிறுவனம் டீசரை வெளியிட்டு உறுதி செய்துள்ளது. டீசரில் ஒரு மாடல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கே Tecno Camon 30 பிரீமியர் அறிமுகமானது சீரிஸின் (வழியாக) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், நிறுவனத்தில் ஒரு போஸ்ட்டில் ஷேர் செய்யப்பட்டுள்ளது , போட்டோ போஸ்ட்டில் கீழே குறிப்பிடப்பட்டுள்ள மாடலை காணலாம். இதற்கான மைக்ரோசைட்டும் அமேசானில் லைவில் உள்ளது.
Tecno Camon 30 5G யில் 6.78 இன்ச் AMOLED டிஸ்ப்ளே இருக்கிறது, இது 120Hz ரெப்ராஸ் ரேட் வீதத்துடன் வருகிறது. இந்த போனில் 5,000mAh பேட்டரி உள்ளது, இது 70W பாஸ்ட் சார்ஜிங்கையும் சப்போர்ட் செய்கிறது, இந்த போனில் Mediatek Dimensity 7020 சிப்செட் உள்ளது. இதில் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உள்ளது. ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான HiOS 14 யில் இயங்குகிறது. ஸ்மார்ட்போனின் பின்புறம் OIS சப்போர்டுடன் 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 2 மெகாபிக்சல் டெப்த் கேமரா மற்றும் AI லென்ஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தில், ஆட்டோஃபோகஸ் சப்போர்டுடன் 50 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா உள்ளது.
நிறுவனம் Tecno Camon 30 Premier Dimensity 8200 சிப்செட்டை வழங்கியுள்ளது. இந்த போனில் 12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி ஸ்டோரேஜ் உள்ளது. இது 120Hz ரெப்ராஸ் ரேட்டுடன் 6.77 இன்ச் LTPO AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது. ஃபோனில் 5000mAh பேட்டரி உள்ளது, இதன் மூலம் 70W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் செய்கிறது மேலும் இரண்டு லென்ஸ்கள் கொண்ட பின்புறத்தில் 50 மெகாபிக்சல் ப்ரைம் கேமரா உள்ளது. இந்த சிறப்பம்சங்களுடன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட மாடல்களை நிறுவனம் வழங்குகிறதா, அல்லது அதில் ஏதேனும் மாற்றம் இருக்கப் போகிறதா அறிமுகத்திருக்கு பிறகு பார்க்கலாம்.
இதையும் படிங்க:OTT யில் இந்த இரண்டு படங்களை மறக்காம பாருங்க