Tecno Camon 30 சீரிஸ் அறிமுகத்திற்க்கு முன்னே அனைத்து தகவலும் லீக்

Updated on 16-May-2024
HIGHLIGHTS

Tecno Camon 30 சீரிஸ் க்ளோபல் சந்தையில் அறிமுகம் செய்ய தயாராக உள்ளது

. இது ஆண்டின் தொடக்கத்தில் MWC 2024 யில் அறிமுகப்படுத்தப்பட்டது

இந்தத் சீரிஸில் Tecno Camon 30, Camon 30 5G, Camon 30 Pro, மற்றும் Camon 30 Premier ஆகிய நான்கு மாடல்கள் அடங்கும்.

Tecno Camon 30 சீரிஸ் க்ளோபல் சந்தையில் அறிமுகம் செய்ய தயாராக உள்ளது. இது ஆண்டின் தொடக்கத்தில் MWC 2024 யில் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது இந்த சீரிஸ் இந்தியாவிலும் அறிமுகம் செய்ய உள்ளது. நிறுவனம் தனது மைக்ரோசைட்டையும் அமேசானில் லைவ் செய்துள்ளது.

இந்தத் சீரிஸில் Tecno Camon 30, Camon 30 5G, Camon 30 Pro, மற்றும் Camon 30 Premier ஆகிய நான்கு மாடல்கள் அடங்கும். நான்கு மாடல்களிலும் சிறப்பம்சங்கள் வித்தியாசம் இருக்கும். நான்கு மாடல்கள் பற்றி இதுவரை கிடைத்த தகவல்களின் அடிப்படையில் டெக்னோ கேமன் 30 சீரிஸ் எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.

Tecno Camon 30 Premier

டெக்னோ கேமன் 30 பிரீமியர் சீரிஸின் மிகவும் பிரீமியம் மாடல் என்று கூறப்படுகிறது. இதில் 6.78 இன்ச் LTPO AMOLED டிஸ்ப்ளே உள்ளது, இது 1.5K ரேசளுசனுடன் வருகிறது. இந்த போன் 144Hz ரெப்ராஸ் ரெட்டை கொண்டுள்ளது. இது Dimensity 8200 Ultra SoC உடன் பொருத்தப்பட்டுள்ளது. இதனுடன், 12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி சேமிப்பகத்துடன் இணைத்தல் வழங்கப்படுகிறது. ஃபோனில் 5000mAh பேட்டரி மற்றும் 70W பாஸ்ட் சார்ஜிங் உள்ளது. இந்த போன் ஆண்ட்ராய்டு 14 OS அடிப்படையிலான HiOS 14 ஸ்கின் மூலம் இயங்குகிறது. போனில் மூன்று 50 மெகாபிக்சல் கேமராக்கள் உள்ளன, இதில் ப்ரைம் லென்ஸ், அல்ட்ரா வைட் லென்ஸ் மற்றும் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸ் ஆகியவை அடங்கும். போனில் 50 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா உள்ளது. அமேசான் மைக்ரோசைட்டில் இந்த போன் டீஸ் செய்யப்பட்டுள்ளது.

#Tecno Camon 30 சீரிஸ் அறிமுகத்திற்க்கு முன்னே அனைத்து தகவலும் லீக்

Tecno Camon 30 Pro

Tecno Camon 30 Pro ஃபோன் மேலே குறிப்பிட்டுள்ள பிரீமியர் மாடலின் அதே விவரக்குறிப்புகளைக் கொண்டுள்ளது. ஃபோனில் 6.78 இன்ச் AMOLED பேனல் உள்ளது ஆனால் இதில் LTPO ஆதரவு இல்லை. தொலைபேசி 144Hz புதுப்பிப்பு வீதத்தைக் கொண்டுள்ளது. இதில் Dimensity 8200 Ultra chip பொருத்தப்பட்டுள்ளது.

இதனுடன், 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் உடன் இணைத்தல் கிடைக்கிறது. இதன் பேட்டரி மற்றும் சார்ஜிங் அம்சங்கள் பிரிமியர் மாடலைப் போன்றே உள்ளன. கேமராவில் சில வேறுபாடுகள் உள்ளன. போனில் 50 மெகாபிக்சல் லென்ஸுடன் ப்ரைமரி மற்றும் அல்ட்ராவைட் சென்சார்கள் உள்ளன. ஆனால் டெலிஃபோட்டோவிற்கு பதிலாக, போனில் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் உள்ளது. போனில் 50 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா உள்ளது.

Tecno Camon 30 5G

Tecno Camon 30 5G 6.78 இன்ச் AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இது 120Hz ரெப்ராஸ் ரேட்டுடன் வருகிறது. இந்த போனில் 5,000mAh பேட்டரி உள்ளது, இது 70W பாஸ்ட் சார்ஜிங்கையும் சப்போர்ட் செய்கிறது இந்த மாடலில் Mediatek Dimensity 7020 சிப்செட் உள்ளது. இதில் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான HiOS 14 யில் இயங்குகிறது. போனின் பின்புறம் OIS சப்போர்த்டன் 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா, 2 மெகாபிக்சல் ஆழமான கேமரா மற்றும் AI லென்ஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தில், ஆட்டோஃபோகஸ் சப்போர்டுடன் 50 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா உள்ளது.

Tecno Camon 30

Tecno Camon 30 என்பது 4G கனேக்சனுடன்வரும் இந்தத் சீரிஸின் என்ட்ரி லெவல் மாடலாகும். இது 5G ஐ சப்போர்டுடன் ஃபோனில் MediaTek Helio G99 Ultimate SoC உள்ளது, இது 8GB RAM உடன் வழங்கப்படுகிறது. இதை 12 ஜிபி வரை நீட்டிக்க முடியும். ஃபோன் ஸ்டோறேஜிர்க்காக 256 ஜிபி இடம் வழங்கப்பட்டுள்ளது. போனில் உள்ள சிறப்பு அம்சம் NFC ஆகும், இது தொடரின் மற்ற மாடல்களில் இல்லை. ஃபோனின் டிஸ்ப்ளே, கேமரா மற்றும் பிற அம்சங்கள் Tecno Camon 30 5G போன்றே உள்ளன.

இதையும் படிங்க Vivo X100 பிரமண்ட கேமராவுடன் அறிமுகம் டாப் 5 அம்சங்கள் பாருங்க

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :