digit zero1 awards

50Mp செல்ஃபி கேமரா உடன் அறிமுகமானது Tecno Camon 30 5G மற்றும் Camon 30

50Mp செல்ஃபி கேமரா உடன் அறிமுகமானது Tecno Camon 30 5G மற்றும் Camon 30
HIGHLIGHTS

Tecno MWC 2024 யில் Tecno Camon 30 சீரிஸ் அறிமுகம் செய்துள்ளது

இந்த சீரிஸ் யில் Tecno Camon 30, Camon 30 5G, Camon 30 Pro 5G மற்றும் Camon 30 Premier 5G ஆகியவை அடங்கும்

Tecno Camon 30 5G மற்றும் Tecno Camon 30 யின் சிறப்பம்சங்களை தெளிவாக பார்க்கலாம்.

டெக்னோ MWC 2024 யில் Tecno Camon 30 சீரிஸ் அறிமுகம் செய்துள்ளது, இந்த சீரிஸ் யில் Tecno Camon 30, Camon 30 5G, Camon 30 Pro 5G மற்றும் Camon 30 Premier 5G ஆகியவை அடங்கும். இருப்பினும் இந்த ஆர்ட்டிக்களில் நாம Tecno Camon 30 மற்றும் Tecno Camon 30 5G யின் பற்றிய சிறப்பை பார்க்க போகிறோம் Tecno Camon 30 5G மற்றும் Tecno Camon 30 யின் சிறப்பம்சங்களை தெளிவாக பார்க்கலாம்.

Tecno Camon 30 5G மற்றும் Camon 30 சிறப்பம்சம்

டெக்னோ Camon 30 5G போனில் 6.78 இன்ச் கொண்ட AMOLED டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது இதன் முழு HD + ரேசளுசன் (1080 x 2436 பிக்சல்கள்) மற்றும் 120Hz ரெப்ராஸ் வழங்குகிறது. இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் 5,000mAh பேட்டரி உள்ளது, இது 70W பாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது Camon 30 ஆனது Mediatek Dimensity 7020 மூலம் இயக்கப்படுகிறது, இது Dimensity 930 யின் மறுபெயரிடப்பட்ட பதிப்பாகும். இதில் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டெர்னல் ச்ட்ப்றேஜ் உள்ளது. ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான HiOS 14 யில் இயங்குகிறது.

இதன் கேமரா செட்டப் பற்றி பேசுகையில் இதில் ஸ்மார்ட்போனின் பின்புறம் OIS சப்போர்டுடன் 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா, 2 மெகாபிக்சல் டெப்த் கேமரா மற்றும் AI லென்ஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தில், ஆட்டோஃபோகஸ் சப்போர்டுடன் 50 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா உள்ளது. இது இரட்டை LED ஃபிளாஷ் உடன் இணைக்கப்பட்டுள்ளது, இது கலர் வெப்பநிலையை அட்ஜெச்மென்ட் செய்ய முடியும்.

இதன் மாற்ற அம்சங்களை பற்றி பேசுகையில் மற்ற அம்சங்களில் இன்-டிஸ்ப்ளே பிங்கர்ப்ரின்ட் சென்சார், ஸ்டீரியோ அவுட்புட் இரட்டை ஸ்பீக்கர்கள், IR பிளாஸ்டர், கிளாஸ் மற்றும் லெதர் பேக் வேரியன்ட்கள் ஆகியவை அடங்கும். டெக்னோ Camon 30 4G யின் சிறப்பம்சங்கள் 5G வெர்சனை போலவே உள்ளன. இருப்பினும், 4G வேரியண்டில் Helio G99 சிப்செட் கொண்டுள்ளது. இது NFC சப்போர்டுடன் வருகிறது, இது எந்த Camon 30 சீரிஸ் ஸ்மார்ட்போன்களிலும் கிடைக்காது.

இதையும் படிங்க: Lava Blaze Curve 5G:கர்வ்ட் டிஸ்ப்ளே உடன் மிட் ரேன்ஜ் போன் கொண்டிருக்கும்

Camon 30 5G மற்றும் Camon 30 விலை தகவல்

தற்பொழுது Tecno Camon 30 மற்றும் Tecno Camon 30 5G பற்றிய விலை மற்றும் விற்பனை தகவலை பற்றி எந்த தகவலும் வரவில்லை இதை தவிர இன்னும் இதன் அதிகாரபூர்வ போட்டவையும் வெளியாகவில்லை

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo