டெக்னோ மொபைல் நிறுவனம் இந்தியாவில் புதிய ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது.அதன் பெயர் TECNO camon iCLICK2 2 என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் HD பிளஸ் ஸ்கிரீன், 19:9 சூப்பர் ஃபுல் வியூ நாட்ச் டிஸ்ப்ளே, 24 எம்.பி. AI. செல்ஃபி கேமரா மற்றும் AI. ஃபேஸ் அன்லாக் வசதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த TECNO camon iCLICK2 ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ P22 பிராசஸர், உடன் 4 ஜி.பி. ரேம் மற்றும் 64 ஜி.பி. ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் இதில் செல்ஃபிக்களை எடுக்க 24 எம்.பி். செல்ஃபி கேமரா, 1.8um பிக்சல், f/2.0 மற்றும் முன்பக்க ஃபிளாஷ் வசதி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஆப்டிமைஸ் செய்யப்பட்ட AI. பியூட்டி அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் செல்ஃபிக்கள் அதிக நெட்ஜுரலாக தோன்றும்
இதனுடன் இதன் கேமராவை பற்றி பேசினால் பின்புறம் 13 மெகாபிக்ஸல் பிரைமரி கேமரா, f/1.8, 5 மெகாபிக்ஸல் இரண்டாவது பிரைமரி கேமரா, AI . போக்கெ மற்றும் சூப்பர் பிக்சல் மோட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
TECNO camon iCLICK சிறப்பம்சங்கள்:
– 6.2 இன்ச் 1500×720 பிக்சல் HD. பிளஸ் டிஸ்ப்ளே
– கிளாஸ் ஃபினிஷ் செய்யப்பட்ட 3D பேக் கவர்
– 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ P22 பிராசஸர்
– 4 ஜி.பி. DDR4 ரேம்
– 64 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஹை ஓ.எஸ். 4.1 சார்ந்த ஆன்ட்ராய்டு 8.1
– டூயல் சிம் ஸ்லாட்
– 13 எம்.பி. பிரைமரி கேமரா, F/1.8
– 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.4
– 24 எம்.பி. செல்ஃபி கேமரா, 1.8um பிக்சல், f/2.0
– கைரேகை சென்சார், ஏ.ஐ. ஃபேஸ் அன்லாக்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளுடூத்
– 3750 Mah பேட்டரி
விலை மற்றும் விற்பனை
இந்தியாவில் TECNO camon iCLICK விலை ரூ.13,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை இந்த வாரம் துவங்குகிறது. பயனர்கள்TECNO camon iCLICK2 ஸ்மார்ட்போனினை இந்தியா முழுக்க சுமார் 35,000-க்கும் அதிக விற்பனையகங்களில் வாங்க முடியும்.
டெக்னோ கேமான் ஐகிளிக் 2 ஸ்மார்ட்போன் அக்வா புளு, ஹவாய் புளு மற்றும் மிட்நைட் பிளாக் என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது.