digit zero1 awards

இந்தியாவில் Rs.7,000 பட்ஜெட்டில் ஃபேஸ் அன்லாக் வசதியுடன் ஸ்மார்ட்போன் அறிமுகம்…!

இந்தியாவில்  Rs.7,000 பட்ஜெட்டில் ஃபேஸ் அன்லாக் வசதியுடன் ஸ்மார்ட்போன் அறிமுகம்…!
HIGHLIGHTS

புதிய ஸ்மார்ட்போன்களில் TA 3 மாடலினை மே மாதத்தில் வெளியிட்ட நிலையில், தற்சமயம் டிஏ 4 ஸ்மார்ட்போனினை இந்தியாவில் வெளியிட்டு இருக்கிறது.

இந்தியாவில் தம்பு TA  4 ஸ்மார்ட்போன் ஜெட் பிளாக், ஷேம்பெயின் மற்றும் சஃபையர் புளு என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் தம்பு டி.ஏ. 4 ஸ்மார்ட்போனின் விலை Rs .6,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போனினை வாங்கும் ரிலையன்ஸ் ஜியோ பயனர்களுக்கு ரூ.2,200 வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் புதுவரவு நிறுவனமான தம்பு டி.ஏ. 2, டி.ஏ. 3 மற்றும் டி.ஏ. 4 என மூன்று ஸ்மார்ட்போன்களையும் எஸ்2440, எஸ்2430, ஏ2400, பி1850, ஏ1810 மற்றும் ஏ1800 உள்ளிட்ட ஃபீச்சர் போன் மாடல்களை ஏப்ரல் மாத வாக்கில் இந்தியாவில் அறிமுகம் செய்து இருந்தது. 

புதிய ஸ்மார்ட்போன்களில் TA  3 மாடலினை மே மாதத்தில் வெளியிட்ட நிலையில், தற்சமயம் டிஏ 4 ஸ்மார்ட்போனினை இந்தியாவில் வெளியிட்டு இருக்கிறது.

Tambo TA  4  சிறப்பம்சங்கள்:

– 5.45 இன்ச் 640×1280 பிக்சல் 18:9 ரக டிஸ்ப்ளே
– 1.25 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் MT6737 64-பிட் பிராசஸர்
– மாலி-T720 GPU
– 2 ஜிபி ரேம்
– 16 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– டூயல் சிம் ஸ்லாட்
– ஆன்ட்ராய்டு 7.0 நௌக்கட்
– 8 எம்பி பிரைமரி கேமரா, டூயல் எல்இடி ஃபிளாஷ்
– 5 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
– கைரேகை சென்சார், ஃபேஸ் அன்லாக்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 3000mah . பேட்டரி 

இத்துடன் 200 நாட்களுக்கு ஸ்மார்ட்போனினை வாரன்டி அடிப்படையில் மாற்றிக் கொள்ளவும், 365 நாட்களுக்கு ஒருமுறை ஸ்கிரீனினை மாற்றிக் கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது. இந்தியா முழுக்க 600-க்கும் அதிக சர்வீஸ் மையங்களை வைத்திருப்பதாகவும், இந்த ஆண்டு இறுதிக்குள் சர்வீஸ் மையங்களின் எண்ணிக்கையை 1000-ஆக அதிகரிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo