சோனி, எக்ஸ்பீரியா இசட்3 ஸ்மார்ட் கைப்பேசி-யின் மேம்பட்ட பதிப்பை அறிவித்துள்ளது. எக்ஸ்பீரியா இசட்3+ என்றழைக்கப்படும் இது, அண்ட்ராய்ட் 5.0(லாலிபாப்) இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்குவதோடு, 3ஜிபி தற்காலிக நினைவகமும், 64 பிட், எட்டு-உள்ளகங்கள் கொண்ட ஸ்நாப்டிராகன் 810 செயலியும் கொண்டு செயல்படுகிறது. சோனி, இந்த கைப்பேசி தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளில், ஜூன் முதலாக கிடைக்கும் என உறுதி அளித்தாலும், கைப்பேசியின் விலை குறித்து அறிவிக்கவில்லை.
சோனி எக்ஸ்பீரியா இசட்3+ 146.3 x 71.9 x 6.9 எம்எம் என்ற பரிமாணத்தையும் , 144 கிராம் எடையோடும் இருக்கிறது. இது 5.2 அங்குல, 1080 படவரைப்புள்ளி முழு உயர் வரையறை காட்சித்திரை (1920×1080), ஐபிஎஸ் காட்சித்திரை எஸ்ஆர்ஜிபி130% ட்ரைலூமினோஸ் 700சிடி பிரகாசமான கைப்பேசிக்கான எக்ஸ்-ரியாலிட்டி ஆகியவற்றை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட் கைப்பேசி 20.7 MP எக்ஸ்மோர் ஆர்எஸ் பின்பக்க கேமரா கொண்டுள்ளது. இந்த கேமரா ஐஎஸ்ஓ12800 புகைப்படம்/ 3200 காணொளி காட்சி, 4கே காணொளி காட்சி பதிவு மற்றும் இன்டலிஜென்ட் ஆக்டிவ் செயல்வகையுடன் கூடிய அவுட்புட் ஸ்டெடிஷாட் போன்றவற்றுடன் திகழ்கிறது. மேலும் இந்த கைப்பேசி, எக்ஸ்மோர் ஆர், 22 எம்எம் பரந்த கோணம், இன்டலிஜென்ட் ஆக்டிவ் செயல்வகையுடன் கூடிய ஸ்டெடிஷாட் ஆகியவை இருக்கும், 5 எம்பி முன் பக்க கேமராவோடு இருக்கிறது. இசட்3+-இல், 32ஜிபி உள் சேமிப்பு நினைவகம் இருப்பதோடு, 128 ஜிபி மைக்ரோஎஸ்டி கார்ட்-க்கான ஆதரவும் உள்ளது. ப்ளூடூத் 4.1, அதி விரைவு யூஎஸ்பி 2.0, மைக்ரோ யூஎஸ்பி ஆதரவு, வை-ஃபை மிமோ, வை-ஃபை ஹாட்ஸ்பாட் வசதி, என்எஃப்சி மற்றும் மிராகாஸ்ட் போன்ற வெளிதொடர்பு இணைய தெரிவுகள் உள்ளன. ஸ்மார்ட் கைப்பேசிக்கு ஆற்றல் அளிக்கும் 2930 எம்ஏஹெச் பேட்டரி 17 மணி நேர குரல் அழைப்புகளுக்கு திறன் அளிக்க வல்லது. இசட்3+-இன் முழு தொழில்நுட்ப விவரங்களை இங்கே காணுங்கள்.
மேலே குறிப்பட்டது போல, இசட்3+, கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட எக்ஸ்பீரியா இசட்3-இன் மேம்பட்ட பதிப்பாகும். சோனி நிறுவனம், 2015 க்கான பிரதான ஸ்மார்ட் கைப்பேசியான இசட் 4-ஐ ஏற்கனவே வெளியிட்டு விட்டது. எக்ஸ்பீரியா இசட்4-இல், 5.2-அங்குல முழு உயர் வரையறை காட்சித்திரை, அண்ட்ராய்ட் 5.0 லாலிபாப், 64-பிட் எட்டு-உள்ளகங்கள் கொண்ட ஸ்நாப்டிராகன் 810 செயலி மற்றும் 3 ஜிபி தற்காலிக நினைவகம் ஆகிய அம்சங்கள் உள்ளன. இது 20.7எம்பி பின்பக்க கேமரா (சிஎம்ஓஎஸ் உணர்வான் எக்ஸ்மோர் ஆர்எஸ்) மற்றும் 5.1 எம்பி முன்பக்க பரந்த கோணம் கொண்ட கேமரா (சிஎம்ஓஎஸ் உணர்வான் எக்ஸ்மோர் ஆர்) கொண்டுள்ளது.
சோனி இன்று, அதன் மத்திய ரக எக்ஸ்பீரியா எம்4 அக்வா ஸ்மார்ட் கைப்பேசியை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. ரூ. 24,990, என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட் கைப்பேசியில், 5-அங்குல 720 படவரைப்புள்ளி காட்சித்திரை உள்ளது. இது அண்ட்ராய்ட் 5.0 லாலிபாப் இயங்குதளத்தை கொண்டிருப்பதோடு, எட்டு உள்ளகங்கள் கொண்ட ஸ்நாப்டிராகன் 615 செயலி மற்றும் 2 ஜிபி தற்காலிக நினைவகம் கொண்டு செயல்படுகிறது. இந்த ஸ்மார்ட் கைப்பேசி, தானே குவிமையப்படுத்தும் திறன் கொண்ட 13எம்பி பின் பக்க கேமரா மற்றும் 5எம்பி முன் பக்க கேமராவும் கொண்டுள்ளது. சோனி நிறுவனம் அதன் செல்ஃபி ஸ்மார்ட் கைப்பேசியான எக்ஸ்பீரியா சி4 – ஐ அடுத்த மாதம் இந்தியாவில் வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளது.